வெண்டிக்காயின் மருத்துவ பயன்கள்!

images 1
images 1

வெண்டிக்காய் பலருக்கும் பிடித்த உணவு வகையாக உள்ளது. இதை சாப்பிடுவதால் உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன.

கெட்ட கொழுப்பை குறைக்க வேண்டும் என நினைப்பவர்கள் வெண்டிக்காயை தாராளமாக சாப்பிடலாம்.

ஏனெனில் வெறும் 100 கிராம் வெண்டிக்காயில் 66 கலோரிகளே உள்ளன என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

வெண்டிக்காயில் உள்ள அந்த வழவழப்புத் திரவம் சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரை அளவைக் குறைக்க உதவுகிறது.

கர்ப்பிணிகளுக்கு மிகவும் அவசியமான போலிக் அசிட் வெண்டிக்காயில் இருக்கிறது. எனவே கர்ப்பிணிகள் அதன் வழவழப்பு திரவம் குறையாமல் வாரம் 2 முறையேனும் சமைத்து சாப்பிடலாம்.

சர்க்கரை நோய், மலச்சிக்கல், புற்றுநோய், அனீமியா, பார்வைக் குறைபாடு, வயிற்றுப் புண் என பல நோய் , உடல் உபாதைகளுக்கும் வெண்டிக்காய் சிறந்த துணையாக உள்ளது.