மிகவும் பயனுள்ள வீட்டுக் குறிப்புகள்!

742417a07e147959664b0f7473f7f3a517f1d5ef2ff17ecc31e70d8ad009189f. RI V TTW
742417a07e147959664b0f7473f7f3a517f1d5ef2ff17ecc31e70d8ad009189f. RI V TTW

நம்முடைய வீடு எப்பொழுதுமே சுத்தமாகவும், வாசனையாகவும் இருக்க வேண்டும் என்பது தான் எல்லோருடைய விருப்பம்.

இதற்காக நாம் பல வழி முறைகளை கையாண்டிருப்போம். என்றாலும் உங்களுடைய வீட்டு பொருட்கள் அலங்கோலமாகவே ஒழுங்கற்ற முறையில் காணப்படலாம். அவற்றை போக்க நீங்கள் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

தேங்காய் தண்ணீரை ரசத்தில் சேர்த்தால் ரசம் நன்றாக இருக்கும்.

கறை படிந்த ஆடையில் சிறிது வினிகர் போட்டு துவைத்தால் கறை நீங்கி விடும்.

கொதிக்கவைத்து ஆறிய நீரில் சீரகப் பொடியை போட்டு குடித்தால் இரத்த கொதிப்பு குணமாகும்.

மண்பாத்திரம் புதிதாக வாங்கினால் அதில் சிறிது எண்ணெய் தடவி அடுப்பில் சற்று நேரம் சூடேற்றி பின் கழுவினால் மண்வாசனையும் வராது விரிசலும் விடாது.

தக்காளி சட்னி செய்யும் போது அதில் சிறிது எள்ளை வறுத்து பொடி செய்து போட்டால் ருசி கூடும்.

மீன்தொட்டியில் உள்ள பழைய தண்ணீரை மாற்றும்போது அதை கீழே கொட்டி விடாமல் செடிகளுக்கு ஊற்றினால் செடிகள் நன்றாக வளருமாம்.

சாப்பாட்டு மேஜையை துடைக்கும் துணியில் சிறிதளவு உப்போ கற்பூரமோ வைத்து துடைத்தால் ஈ மற்றும் பூச்சிகள் அதில் அமராது.

பழைய சென்ட் பாட்டில்களில் சிறிது தண்ணீர் விட்டு நன்கு குலுக்கி வைத்து கொண்டால் கைக்குட்டைகளை அடித்தால் மணமாக இருக்கும்.

துணிகளை துவைத்து முடித்தபின் கடைசியாக அலசும்போது அந்த தண்ணீரில் சில சொட்டு கிளிசரின் கலந்து விட்டால் துணிகள் சுருக்கம் இல்லாமல் பளிச்சென்று இருக்குமாம்.