மாரடைப்பை தடுக்கும் சில எளிய வழிமுறைகள்

hhhhh 1
hhhhh 1

உலகளாவிய ரீதியில் 17 மில்லியன் மக்கள் இதயம் தொடர்பான பிரச்னைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதில் 3 மில்லியன் மக்கள் மாரடைப்பால் மரணங்களை சந்திக்கின்றனர் என்றும் உலக சுகாதார அமைப்பு அறிக்கையிட்டுள்ளது .

மாரடைப்பிலிருந்து எம்மை பாதுகாத்துக்கொள்ள சில எளிய வழிமுறைகள்:

உடற்பயிற்சி

இன்றைய கால கட்டத்தில் நவீன தொழிநுட்பங்களின் வளர்ச்சி காரணமாக இருந்த இடத்திலேயே பலரும் வேலை செய்வதால் உடல் உழைப்பு என்பது மக்களிடையே கேள்வி குறியாகிவிட்டது.

உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்த ஒரு வாரத்திற்கு 150 நிமிடங்கள் உடற்பயிற்சி மற்றும்
நடைப்பயிற்சி செய்தல் நன்மை அளிக்க கூடியது . இவ்வாறு உடற்பயிற்சி செய்வதன் மூலம் மாரடைப்பு வருவதை தடுக்கலாம் .

உணவு பழக்க முறைகள்

புரதச்சத்து உணவுகள் , பழங்கள், காய்கறிகள், தானியங்கள் போன்றவற்றை அதிகம் உண்பதனால் கொழுப்பு உணவுகளை முற்றிலும் தவிர்ப்பதனாலும் இதயத்தினை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளலாம் .

புகைபிடிப்பது

புகை பிடிக்கும் பழக்கமானது இரத்த ஓட்டத்தை உறைய வைக்கும். இதனால் இதயம் இரத்த ஓட்டமின்றி இயங்கும் போது மாரடைப்பு உருவாக வாய்ப்புக்கள் அதிகமாக காணப்படுகிறது எனவே புகைப்பிடிக்கும் பழக்கத்தை தவிர்த்துக்கொள்ளுதல் சிறந்தது .