முட்டை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

44

முட்டை ஒரு மலிவான, பாதுகாப்பான, இயற்கையான அதிகூடிய ஊட்டச்சத்துள்ள உணவாகும். தகரங்களிலே அடைத்து விற்பனையாகும் சத்துமாக்களுடன் ஒப்பிடும்பொழுது இதிலிருக்கும் ஊட்டச்சத்து வீதம் எவ்வளவோ அதிகமாக இருப்பதுடன் எந்தவிதமான இரசாயனக் கலப்புமற்ற இயற்கையான உணவாக இது விளங்குகிறது.

குருதி அமுக்கம், இருதய நோய், நீரிழிவு நோய், கொலஸ்ரோல் அதிகரிப்புப் போன்ற நோய்கள் உள்ளவா்கள்கூட வாரத்திற்கு 3 முட்டைகள் வரை உண்பது மிகவும் சிறந்ததாகும். முட்டை ஒரு ஆபத்தான உணவு என்ற சிந்தனை மாற்றம் பெறவேண்டும்.

சுகதேகியாக இருப்பவா்களும் சிறுவா்களும் அதிகளவு முட்டைகளை உணவிலே சோ்த்துக்கொள்வது நல்லது. முட்டையை அரை அவியலாகவோ, பச்சையாகவோ உண்பதிலும் பாா்க்க அவித்து அல்லது பொரித்து உண்பது சிறந்தது.

கோழி முட்டை மட்டுமல்ல வாத்துமுட்டை, காடை முட்டை போன்றவையும் மிகவும் பாதுகாப்பானவையும் ஊட்டச்சத்து நிறைந்தவையும் ஆகும்.