வயிற்றுப்புண்ணுக்கு சிறந்த தீர்வை தரும் தேங்காய் பால் சூப்

6666666666666666666666
6666666666666666666666

தற்போதைய காலகட்டத்தில் வயிற்றுப்புண் என்னும் நோயானது சர்வ சாதாரணமாக அனைவரிடத்திலும் காணப்படுகிற ஒன்றாகும் அதாவது உணவுப்பாதை, வயிறு, சிறு குடல் இவற்றில் புண் ஏற்படுது வயிற்றுப்புண் எனப்படுகிறது .

வயிற்று புண்ணால் அபாதிப்படுபவர்களுக்கான தீர்வை வழங்க கூடியது தேங்காய்பால் சூப்.

ஆரோக்கியமான தேங்காய்பால் சூப் செய்வது எப்படி என்பதன் படிமுறைகள்

தேவையான பொருட்கள்
தேங்காய் பால் – 1 கப்
பெரிய வெங்காயம் – 3
இஞ்சி – சிறிய நெல்லிக்காய் அளவு
எலுமிச்சை பழம் – பாதி பழம்
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லி – சிறிதளவு
பச்சைமிளகாய் – 6
நல்லெண்ணெய் – தேவையான அளவு
பசும்பால் – 1 கப்
சோள மாவு – 2 தே .கரண்டி

செய்முறை

வெங்காயம், பச்சைமிளகாய், கொத்தமல்லியை சிறிதாக நறுக்கி கொள்ளவும்.

பாத்திரத்தில் எண்ணெய்யை ஊற்றி சூடானதும் வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கவும்.

வெங்காயம் பொன்னிறமாக மாறியதும் அதனுடன் பால், பச்சைமிளகாய், இஞ்சி, கொத்தமல்லி , உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

நன்றாக கொதித்தவுடன் தேங்காய் பாலில் சிறிதளவு சோளமாவை சேர்த்து கொதிக்கும் கலவையுடன் கலக்கவும் .

நன்கு கொதித்ததன் பின் தேங்காய் பால் சூப்புக்கு தேவையான அளவு உப்பு, மற்றும் எலுமிச்சை சாறு ஊற்றி இறக்கி பரிமாறவும்.