வெந்நீர் அருந்துவதால் ஏற்படும் நன்மைகள்!

1c5b388872b02403e377f217857d6820
1c5b388872b02403e377f217857d6820

உடல் எடையை குறைக்க வேண்டும் என்று முயற்சிப்பவர்கள் தினமும் காலையில் சுடுதண்ணீரில் எலுமிச்சையை கலந்து பருகினால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.

அதிகமான தண்ணீர் அருந்துவது நமது உடலுக்கும் மிகவும் ஆரோக்கியமான ஓன்று. அதிலும் குறிப்பாக காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்துவதால் ஏகப்பட்ட நன்மைகள் உள்ளன.

அதேபோல் குளிர்ந்த நீரை விட வெந்நீரை ஆறவைத்து குடிப்பதனால் மேலும் பல்வேறு நன்மைகள் உண்டாகிறது.

மூக்கடைப்புக்கு சரியாக
நம் மூக்கிற்கும் தொண்டைக்கும் ஏகப்பட்ட பிரச்சனைகளில் மூக்கடைப்பு ஒன்று. இதமான சுடுநீரைக் குடித்தால், இப்பிரச்சனையை சரிசெய்யலாம்.

நச்சுக்கள் நீங்க
வெந்நீர் குடித்தவுடன், நம் உடல் வெப்பநிலை உயரும். அது உடனடியாக வியர்வையாக உடம்பை விட்டு வெளியேறி விடும். இதனால் உடம்பில் உள்ள நச்சுத் தன்மைகள் அனைத்தும் வெளியேறி உடல் சுத்தமாகும்.

முடி வளர்ச்சிக்கு
அடிக்கடி வெந்நீர் குடிப்பதால் முடிகள் நன்றாக வளர்வதுடன், முடிகளின் வேர்களும் சுறுசுறுப்பாகி, மேலும் முடிகள் வளர வழி வகுக்கும்.

இரத்த ஓட்டம் சீராக இருக்க
வெந்நீரைத் தொடர்ந்து குடித்து வந்தால், இரத்த ஓட்டம் சீராகும். மேலும் நரம்பு மண்டலத்தின் ஓரத்தில் தேங்கியுள்ள தேவையில்லாத கொழுப்புகள் நீங்கும்.

குடல் இயக்கம் சீராக செயல்பட
மிதமான சுடுநீரை தினமும் காலையில் குடித்து வந்தால், குடல் இயக்கம் அதிகரிக்கும்.

எடை குறைக்க
தேவையில்லாமல் உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்களைக் குறைத்தாலே எடை குறைந்துவிடும். அதற்கு, தினமும் காலையில் மிதமான் சுடுநீரைக் குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

மாதவிடாய் பிரச்சனை குறைய
மாதவிடாய் ஏற்படும் நாட்களில் பெண்கள் சூடான நீரை அடிக்கடி குடித்து வந்தால், மாதவிடாயினால் ஏற்படும் வலி குறையும்.