பற்களின் பின்புறத்தில் உள்ள மஞ்சள் கறையை நீக்கும் வழிமுறைகள்

hqdefault
hqdefault

பற்களின் முன்பகுதியை மட்டும் பராமரிக்கும் பலர் பின்பகுதியை கவனிப்பதில்லை.அனைவரும் பற்களை தேய்க்கும்போது பின்புறமும் தேய்க்க மறந்துவிடுவார்கள். சிலர் தேய்த்தாலும் நன்கு தேய்க்காமல் விட்டுவிடுவார்கள்.

இதனால் பின்பகுதி பற்கள் மஞ்சள் நிறமாக இருக்கும், அதை சரி செய்ய சில எளிமையான முறையை பார்ப்போம்.

இதற்கு தேவையான பொருட்கள்:
  • பேக்கிங் சோடா – 2மேசைக்கரண்டி
  • தேங்காய் எண்ணெய் – 1 மேசைக்கரண்டி
  • ஆப்பிள் சீடர் வினிகர் – 1 மேசைக்கரண்டி
  • எலுமிச்சை சாறு – 1 மேசைக்கரண்டி
  • டூத் பேஸ்ட் – 1 மேசைக்கரண்டி
  • அலுமினியத்தாள்
செய்முறை :

மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பொருட்களையும் ஒரு கிண்ணத்தில் போட்டு பேஸ்ட் போல் கலந்துகொள்ளவும்.

அந்தக் கலவையை அலுமினியத் தாளை விரித்து அதில் பரப்பியவாறு வைக்கவும். பின் அதை அப்படியே எடுத்து பற்களை சுற்றிலும் ஒட்டிவிட வேண்டும். 2 நிமிடங்கள் கழித்து நீக்கிவிட்டு பிரெஷ் கொண்டு தேய்த்துவிட்டு வாயை வெந்நீரால் கொப்பளித்தால் பற்களில் உள்ள கறை குறைந்திருக்கும்.

இந்த கறைகள் முழுமையாக நீங்க இதை வாரம் ஒருமுறை செய்யலாம், அப்படி செய்யும் பட்சத்தில் நல்ல பலன் கிடைக்கும்.