உடலுக்கு அற்புத பயனை தரும் பீட்ரூட்

4444
4444

பீட்ரூட்டில் ஏராளமான சத்துக்கள் காணப்படுகின்றது . காய், கீரை, ஜூஸ் என பீட்ரூட்டின் அனைத்து பாகங்களும் உடலுக்கு நன்மை பயக்கக் கூடியவை.

தினமும் 100 கிராம் பீட்ரூட் சாப்பிட்டால் உடலில் ஏற்படும் நன்மைகள்

உயர் இரத்த அழுத்தம்

ஒருவர் தினமும் 100 கிராம் பீட்ரூட் சாப்பிட்டால், ஆறு மணிநேரத்திற்குள் இரத்த அழுத்தம் குறைவடையும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன .

அதாவது பீட்ரூட்டினுள் உள்ள உட்பொருட்கள் தமனிச் சுவர்களை விரிவடையச் செய்து, இரத்த ஓட்டத்தை சீராக்கும். எனவே தினமும் உயர் இரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள், பீட்ரூட்டை தினமும் சேர்த்து கொள்ளவது நன்மை பயக்கும் .

கெட்ட கொழுப்பு

கரையக்கூடிய நார்ச்சத்துக்கள், ஃப்ளேவோனாய்டுகள் மற்றும் பீட்டா சையனின் உள்ளது. பீட்டா சையனின்கள் பீட்ரூட்டிற்கு நிறத்தை வழங்குவதோடு, செல்களுக்கு வலுவூட்டவும் செய்யும். மேலும் பீட்ரூட் இரத்த நாளங்களில் படிந்துள்ள கெட்ட கொழுப்புக்களைக் கரைக்கும்.

எலும்பு பிரச்சினைகள்

இது எலும்புகளுக்கு வேண்டிய கல்சியத்தைப் பெற உதவும். கல்சியம் எலும்புகள் மற்றும் பற்களுக்கு அத்தியாவசியமானது. எனவே எலும்புகள் மற்றும் பற்களை வலிமையாக வைத்துக் கொள்ள, எலும்பு பிரச்சனை உள்ளவர்கள் தினமும் ஒரு டம்ளர் பீட்ரூட் ஜூஸை குடிப்பது சிறந்தது .

புற்றுநோயைத் தடுக்கும்

பீட்ரூட்டில் உள்ள பீட்டா சையனின்கள், புற்றுநோயை உண்டாக்கும் கட்டிகளின் வளர்ச்சியைத் தடுத்து, உடலில் ஏற்படும் பல வகையான புற்றுநோய்களில் இருந்து பாதுகாப்பு அளிக்கிறது .