வல்லாரை கீரையின் மருத்துவ பயன்கள்!

1542088967 2744
1542088967 2744

வல்லமை மிக்க கீரை என்பதால் வல்லாரை எனப்பெயர் பெற்றது.

எந்த விதமான காய்ச்சலாக இருந்தாலும் வல்லாரை இலையால் செய்யப்பட்ட மாத்திரை குணமாக்கும்.

உடலில் ஏற்படும் கட்டிகள் மற்றும் புண்கள் ஆகியவற்றை வல்லாரை சரிசெய்து விடும் ஆற்றல் வாய்ந்தது.

வல்லாரை இலையுடன் மிளகு, துளசி இலை, ஆகியவற்றை சம அளவு எடுத்து மெழுகுபதமாக அரைத்து மாத்திரைகளாக உருட்டி நிழலில் உலர்த்தி வைத்துக்கொண்டு வெந்நீரில் சாப்பிட்டால் காய்ச்சல் குணமாகும்.

யானைக்கால் நோய் உள்ளவர்கள் இந்த இலையை தொடர்ந்து காலில் வைத்து கட்டி வந்தால் யானைக்கால் நோய் எளிதில் குணமாகும்.

வல்லாரை இலையை அரைத்து உள்ளுக்குள் கொடுத்தால் விரை வீக்கம், வாயுவீக்கம், தசை சிதைவு, போன்றவை குணமாகிவிடும்.

வல்லாரை கீரை நோய் எதிர்ப்பு மருந்தாகவும் பயன்படுகிறது.

மேலும் உடலில் உள்ள நோய் கிருமிகளை அழிக்கும் சக்தியும் வல்லாரைக்கு உண்டு. வல்லாரை கீரையை வலியை போக்கக் கூடிய ஒரு மேற்பூச்சு மருந்தாகவும் பயன்படுத்த முடியும்.

வல்லாரை கீரையை எடுத்துக் கொண்டு அதை நீர் விடாமல் நன்றாக பசை போல் அரைத்துக் கொள்ள வேண்டும். இந்த பசையை வீக்கம் உள்ள இடத்தில் ஒரு பற்று போல் போட்டு வந்தால் வீக்கம் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும்.