மோர் குடிப்பதனால் உடலிற்கு கிடைக்கும் அற்புத பலன்கள்

44444
44444

தயிர், மோர் இரண்டுமே உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடியது ஆனால், தயிரை விட மோர் உடலில் குளிர்ச்சியை அதிக நேரத்துக்கு தக்கவைத்து கொள்ள உதவுகிறது . மேலும் மோர் மனிதனுக்கு அமிர்தம் போன்றது .

தினமும் மோர் குடிப்பதன் நன்மைகள்;

01.கல்சியம் குறைபாடு, வயிற்றில் ஏற்படும் எரிச்சல், நீரிழப்பு ஆகியவற்றை சரிசெய்யும்.

02.உடலிலுள்ள தேவையற்ற நச்சுகளை வெளியேற்றும்.

03.செரிமானத்தை எளிதாக்கும். கொழுப்பைக் குறைக்கும். வாய்ப்புண், வயிற்றுப்புண் ஆகியவற்றைச் சரிசெய்யும்

04.தயிரை விடச் சிறந்தது மோர். எளிதில் ஜீரணமாகக் கூடியது.
உடல் எடையைக் குறைக்கவல்லது, உணவு உண்ட பின் ஒரு குவளை நீர் மோர் பருகினால் உண்ட உணவுகள் விரைவில் சீரணமாகி உடலைச் சீராக வைக்கும்.

05.பெண்களின் மாதவிலக்குக் காலங்களில் உண்டாகும் போக்கைக் கட்டுப்படுத்தவும் வயிற்றுவலியைக் குறைக்கவும் வெந்தயம் சேர்த்த நீர்மோர் உதவும்.

06.மூல நோய்க்கு மோர் பிரமாதமான மருந்து. வயிற்றுப்போக்கு, அஜீரணக் கோளாறுகளுக்கெல்லாம் மோர் சிறந்த மருந்து.

07.பால், மோ‌ர், பழ‌ச்சாறுக‌ள் அ‌ளி‌ப்பது குழ‌ந்தைக‌ளி‌ன் உட‌ல் வள‌ர்‌ச்‌சி‌க்கு ந‌ன்மை அ‌ளி‌க்கு‌ம்.

குறிப்பு

சளி தொந்தரவு, தொண்டை எரிச்சல், இருமல் போன்ற உபாதைகள் இருக்கும் போது மோர் மற்றும் மோர் சாதமும் சாப்பிடக்கூடாது.