பல்வேறு மருத்துவ குணங்கள் அடங்கிய தேங்காய் பால்!

1563275783 7665
1563275783 7665

தேங்காயிலும் சரி, அதன் பாலிலும் சரி, பல அற்புத நன்மைகள் ஒளிந்துள்ளது.

தேங்காய் பாலில் வைட்டமின் சி, இ, பி1, பி3, பி5, பி6, இரும்புச்சத்து, செலீனியம், கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ் ஆகிய சத்துகள் உள்ளன.

தேங்காய் பாலின் நன்மைகளை தெரிந்து கொண்டால் நிச்சயம் அதை உணவில் சேர்த்துக் கொள்வீர்கள்.

அந்தவகையில் தற்போது இதன் நன்மைகள் என்னென்ன என்பதை பற்றி பார்ப்போம்.

தேங்காய் பால் மாங்கனீஸ் சத்து அதிகம் நிறைந்திருப்பதால் அதை அவ்வப்போது அருந்தி வருபவர்களுக்கு நீரிழிவு ஏற்படும் வாய்ப்புகள் குறைகிறது.

உடலின் அநேக செயல்பாட்டிற்கு பயன்படும் முக்கிய உலோகமாக காப்பர் விளங்குகிறது. அதிலும் காப்பர் மற்றும் வைட்டமின் சி, சருமம் மற்றும் இரத்தக் குழாய்களை நெகிழ்வுத் தன்மையுடைன் மீள் திறனுடன் வைத்திருக்கும். இத்தகைய காப்பர் தேங்காய் பாலில் அதிகம் நிறைந்துள்ளது.

தேங்காய் பால் எலும்புகள் வலிமையாக இருப்பதற்கு கால்சியம் சத்து அவசியமாகும். அத்தோடு பாஸ்பரஸ் சத்தும் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு தேவையானதாக இருக்கிறது.
இரும்புச்சத்து குறைபாடு இருப்பவர்கள் தேங்காய்பாலை சேர்த்து கொள்ளலாம்.

எப்போதெல்லாம் தசை பிடிப்பு மற்றும் தசை வலி ஏற்படுகிறதோ, அப்போதெல்லாம் கொஞ்சம் உணவோடு சேர்த்து தேங்காய் பாலை பருகினால் நல்ல பலன் கிடைக்கும்.

தேங்காய் பாலில் அடங்கியுள்ள அதிகப்படியான நார்ச்சத்து உள்ளது. இது வெகு விரைவிலேயே பசியை அடங்கச் செய்யும். இதனால் உடல் எடையும் குறையும்.

செலினியம் தேங்காய் பாலில் அதிகமுள்ளது. தினமும் தேங்காய் பாலை அருந்துபவர்களுக்கு கீல்வாத பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்பு குறைகிறது.

தேங்காய் பாலில் பொட்டாசியம் அதிகம் உள்ளதால் உடம்பில் உள்ள இரத்தக் கொதிப்பின் அளவை குறைக்க உதவும்.

தேங்காய் பால், உடலில் உள்ள நோய் எதிர்ப்பு ஆற்றலை உறுதியாக வைத்திருப்பதால், அடிக்கடி ஏற்படும் சளி மற்றும் இருமலை விரட்டியடிக்க உதவி புரியும்.

தேங்காய் பாலில் வைட்டமின் சி நிறைந்திருப்பதால், உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பை வளப்படுத்தும்.