பட்டுப்போன்ற மென்மையான கூந்தலைப் பெற சில எளிய வழிகள்

19 1447917695 hair growth
19 1447917695 hair growth

பொதுவாக நீளமான தலைமுடியோ, சற்றுக் குட்டையான தலைமுடியோ அது மென்மையாக இருக்க வேண்டும் என்று அனைத்து பெண்களும் நினைப்பார்கள்.

ஆனால் கூந்தலின் பளபளப்பிற்காக ரசாயனங்கள் கலந்த செயற்கை பொருட்களை தலைக்கு உபயோகிப்பதுண்டு. இருப்பினும் இது கூந்தலை அதிகம் பாதிக்கும்.

எனவே வீட்டில் கிடைக்கக் கூடிய பொருட்களே வைத்து கூட கூந்தலை மென்மையாகவும் ஆரோக்கியமாகவும் மாற்ற முடியும்.

தற்போது அந்த பொருட்கள் என்னென்ன என்பதை பற்றி பார்ப்போம்.

தேவையான பொருட்கள்
செம்பருத்திபூ – 5 முதல் 10 எண்ணிக்கை வரை
நெல்லிக்காய் – 2 அல்லது 3
தேங்காயெண்ணெய் – 1 தே.க
வெந்தயப்பொடி – 1 தே.க
கனிந்து நன்றாக பழுத்த வாழைப்பழம் – 1 கூந்தல் நீளமாக இருந்தால் 2 கூட சேர்க்கலாம்.
தயிர் – 4 தே.க
செய்முறை
செம்பருத்தி பூவின் இதழ்களை தனியாக எடுத்து வைக்கவும். நெல்லிக்காயை கொட்டை நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கவும்.

வாழைப்பழத்தை கிண்ணத்தில் சேர்த்து நன்றாக மசிக்கவும்.

செம்பருத்தி பூ இதழ்களை தனியாக மிக்ஸியில் அரைக்கவும். நெல்லிக்காயையும் தனியாக கட்டியில்லாமல் அரைத்து சாறை மட்டும் வடிகட்டவும்.

மசித்த வாழைப்பழத்தில் அரைத்த செம்பருத்தி பூ, நெல்லி சாறு அல்லது விழுது, வெந்தயப்பொடி, எண்ணெய், தயிர் அனைத்தையும் சேர்த்து நன்றாக குழைக்கவும். நன்றாக பேஸ்ட் பதத்துக்கு குழைத்து வைக்கவும்.

கூந்தலை பிரித்து பிரித்து முதலில் தடவ வேண்டும். பிறகு கூந்தலின் வேர்ப்பகுதி முதல் நுனிவரை தடவி விடவும். அரை மணி நேரம் ஆனாலும் பொறுமையாக எல்லா முடிகளிலும் வேர்முதல் நுனிவரை தடவி விடவும்.

ஒரு மணி நேரம் முதல் இரண்டு மணி நேரம் வரை ஊறவிடவும். பிறகு வெதுவெதுப்பான நீரில் ஷாம்பு எதுவுமில்லாமல் சுத்தமான நீரில் அலசி கொள்ளவும். பிறகு கூந்தலை துடைத்து எடுத்தால் கூந்தல் மென்மையாக இருக்கும்.