கழிவறையில் 10-15 நிமிடத்துக்கு மேல் இருந்தால் இந்த நோய்க்கான அறிகுறி!

625.500.560.350.160.300.053.800.900.160.90 33
625.500.560.350.160.300.053.800.900.160.90 33

தினமும் மலம் கழித்தால் தான் உடல் ஆரோக்கியமாக உள்ளது என்று அர்த்தம். ஆனால் சிலருக்கு 2 நாட்களுக்கு ஒருமுறை மலம் கழிப்பார்கள். அதற்காக இவர்களது உடல் ஆரோக்கியம் சிறப்பாக இல்லை என்று அர்த்தம் இல்லை.

இருப்பினும் ஒருவர் வாரத்திற்கு 3 முறைக்கும் குறைவாக மலத்தைக் கழித்தால் தான், அவர்களது உடலில் பிரச்சனை உள்ளது என்று அர்த்தம்.

சிலர் கழிவறைக்கு சென்றால் மணிக்கணக்கில் அமர்ந்திருப்பார்கள். இதற்கு ஒன்று அவர்கள் அங்கு தங்களது மொபைலை நோண்டிக் கொண்டிருக்கலாம்.

இல்லாவிட்டால் மலம் கழிப்பதில் பிரச்சனையை சந்திக்கலாம். பிட்ஸ்பர்க் பல்கலைகழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள், ஆரோக்கியமான உடலைக் கொண்ட ஒருவர் 10-15 நிமிடத்திற்கு மேல் கழிவறையில் இருக்கமாட்டார்கள் என்று கூறுகிறார்கள்.

ஒருவர் தினமும் மலம் கழிக்கும் போது, மிகவும் சிரமப்பட்டு மலத்தை வெளியேற்றினால், அதனால் மூல நோய் வருவதற்கான அபாயம் அதிகரிக்கும்.

மூல நோய் என்பது மலப்புழை அல்லது மலக்குடலின் கீழ் பகுதியில் உள்ள நரம்புகள் வீங்குவதால் ஏற்படுவதாகும்.

மூல நோய்க்கான அறிகுறிகள்
மலப்புழையைச் சுற்றி வலி மற்றும் எரிச்சல், மலப்புழையைச் சுற்றி அளவுக்கு அதிகமான அரிப்பு, மலப்புழைக்கு அருவே அரிப்பை உண்டாக்கும் வீக்கம்.

மூல நோய் மிகவும் வலிமிக்கது. இது தானாக சரியாகாது. சரியான மருந்துகளின் உதவியுடன் தான் இப்பிரச்சனையில் இருந்து விடுபட முடியும்.

மூல நோய் ஏற்படுவதற்கான முக்கிய காரணங்கள்
மணிக்கணக்கில் கழிவறையில் அமர்ந்திருப்பது, ஒவ்வொரு முறையும் குடலியக்கத்தின் போதும் சிரமத்தை சந்திப்பது, நாள்பட்ட மலச்சிக்கல் பிரச்சனையால் கஷ்டப்படுவது, குடும்பத்தில் யாருக்கேனும் மூல நோய் இருப்பது, கடுமையான எடையைத் தூக்குவது, உடலில் உள்ள அதிகப்படியான அழுத்தம் ஏற்படும்.