பச்சை வாழைப்பழம் உண்பதனால் ஏற்படும் நன்மைகள்!

pachchai banaana
pachchai banaana

வாழைப்பழங்களில், பச்சை வாழைப்பழம் பலவித நன்மைகளை வாரி வழங்குவதாக இருக்கிறது. மஞ்சள் வாழைப்பழத்தை விட அதிக மருத்துவகுணம் நிறைந்த பழமாக பச்சை வாழைப்பழம் இருக்கின்றது.

பச்சை வாழைப்பழம் சாப்பிடுவதனால் ஏற்படும் பயன்கள்:

01.பச்சை வாழைப்பழத்தில் ஸ்டார்ச் அதிக அளவில் உள்ளதால் நீரிழிவு நோயாளிகள் ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டுமெனில் இதனை சாப்பிடலாம்.

02.குடல்களில் பழுதுபட்ட மெல்லிய சவ்வுத் தோல்களைச் விரைவில் வளரச் செய்து புண்ணை ஆற்றிவிடும் சக்தி பச்சை வாழைப்பழத்திற்கு உண்டு.

03.குடல்களில் சுரக்கும் அமிலங்களும் நச்சுப் பொருட்களும் அரிப்பதன் காரணமாக குடல்புண் என்கிற அல்சர் ஏற்படுகிறது. பச்சை வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இந்த பாதிப்பில் இருந்து விடுபடலாம்.

  • 04.இதய நோயாளிகளுக்கும் சிறந்தது, அதுமட்டுமின்றி சூடாக்கிய 1 கப் பச்சை வாழைப்பழத்தில் 3.6 கிராம் நார்ச்சத்து உள்ளது, எனவே உடல் எடையை குறைக்க விரும்புவோர் இதனை எடுத்துக்கொள்ளலாம்.
  • 05.பச்சை வாழைப்பழத்தில் விட்டமின் B6 நிறைந்துள்ளதால் உடலில் ஆக்ஸிஜனேற்றம் சிறப்பாக செயல்புரிய உதவுகிறது. மேலும் அது ஹீமோகுளோபின் உருவாவதற்கு விட்டமின் B6 அவசியமான ஒன்றாகும். விட்டமின் B6 இரத்ததில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.
  • 06.சீரான பற்களின் வளர்ச்சிக்கு பச்சை வாழைப்பழம் சாப்பிட வேண்டிய ஒன்றாகும்.