அதிகளவு பாதாம் உண்பதன் விளைவுகள்!

625.500.560.350.160.300.053.800.900.160.90 38
625.500.560.350.160.300.053.800.900.160.90 38

ஊட்டச்சத்துகள் மற்றும் அன்டி ஆக்சிடென்ட் நிறைந்த ஒரு ஆரோக்கிய சிற்றுண்டிதான் பாதாம்.

பாதாம் நமது ஆரோக்கியத்தை பாதுகாப்பதில் நமக்கு உற்ற நண்பன் தான். பாதாமில் அதிகளவு விட்டமின் ஏ உள்ளது. இது உடலின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அதன் சுவையில் மயங்கி பாதாமை மிக அதிகளவு சாப்பிட்டால், அது எதிர்மறை விளைவுகளை தரக்கூடியது.

அளவாக பாதாம் சாப்பிடுவது இருதயத்திற்கு மிகவும் நல்லது. அதிகமாக பாதாம் சாப்பிடுவது உடல் எடையை அதிகரிக்க செய்யும். உப்பு மற்றும் காரம் சேர்க்கப்பட்டு சாப்பிடும் பாதாம் நல்லது என்றாலும் கூட, அவற்றை நீங்கள் அதிகமாக எடுத்துக்கொண்டால், அது உடலில் நச்சுத்தன்மையை உருவாக்கும்.

ஒரு நாளில் 3-4 பாதாம் பருப்பு சாப்பிட்டால் அது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். கல்சியம் சத்தை கிட்னி எடுத்து கொள்ளாத வகையில் தடுக்க கூடியவை. எனவே, அதிக அளவில் பாதாம் சாப்பிட்டால் கிட்னியில் கற்கள் கூட உண்டாகும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

அதிகளவு பாதாம் உண்பதன் தீமைகள்:

ரத்த ஓட்டம்

பாதாமில் உள்ள வைட்டமின் ஈ, ஒரு நாளைக்கு 25 முதல் 536 mg அளவே உடலில் இருக்க வேண்டும். மீறினால் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு ரத்தம் உறைந்து விடும்.

நரம்பு தளர்ச்சி

கசப்பு கொண்ட பாதாமை சாப்பிட்டால் வயிற்று வலி, நரம்பு தளர்ச்சி, போன்ற பல வித பிரச்சினைகள் உங்களுக்கு உண்டாகும்.

ரத்தம் அழுத்தம்

பாதாமில் உள்ள மாக்னீஸ் அதிக அளவில் நமது உடலுக்கு சென்றால் ரத்தம் அழுத்தம் அதிகரிக்க கூடும்.

செரிமான கோளாறுகள்

பாதாம் அதிகமாக சாப்பிட்டால் மூச்சு திணறல், தோலில் அரிப்புகள், அலர்ஜிகள் உண்டாகும். மேலும் செரிமான கோளாறுகள், வயிற்றில் பகுதியில் பிரச்சினைகள் வரும் .

சிறுநீரக கற்கள்

சிறுநீரக கற்கள் அல்லது பித்தப்பை நோய் பாதிப்பு உள்ளவர்களும் பாதாம் பருப்பை சாப்பிட கூடாது.

தலைவலி

பாதாமில் அதிக அளவு வைட்டமின் E காணப்படுகிறது, இதன் காரணமாக அதிகப்படியான அளவு தலைவலி, சோர்வு உண்டாகும் வாய்ப்பு ஏற்படும்.