மருத்துவ குணம் நிறைந்த வாழைத்தண்டின் நீர்!

veg 0124
veg 0124

வாழையின் பூ, தண்டு, காய், பழம், இலை என அனைத்தும் மருந்தாகி பயன்தருகிறது. பல்வேறு நன்மைகளை கொண்ட வாழையின் மகத்துவம் குறித்து நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் பார்க்கலாம்.

முக்கனிகளுள் ஒன்றான வாழையின் அனைத்து பாகங்களும் உடலின் பல்வேறு பிரச்சனைகளை சரிசெய்யும் அளவில் சத்துக்களை உள்ளடக்கியுள்ளது. அதில் அனைவருக்கும் வாழைப்பழத்தின் நன்மைகளைப் பற்றி தெரியும். அதே சமயம் வாழைத்தண்டின் நன்மைகளைப் பற்றி பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

கொழுப்பைக் குறைக்க

கொழுப்பைக் குறைக்கும். வயிற்றுப் புண்களைச் குணப்படுத்தும்.சிறுநீர் எரிச்சலைப் போக்கும். ஊளைச் சதையைக் கரைத்து, உடல் பருமனைக் குறைக்கும்.

அதிக உடல் பருமன் கொண்டவர்கள், தொப்பை உள்ளவர்கள் அடிக்கடி வாழைத்தண்டை உணவில் சேர்த்துக் கொண்டால் நலம்.

மலச்சிக்கலைப் போக்க

பொதுவாக நாம் வாழைத்தண்டை பொரியல், எட்டு கூட்டு, சாம்பாராக செய்து சாப்பிடுவது வழக்கம். சிறுநீரக கற்களைக் கரைக்க வாழைத்தண்டு சாறெடுத்து அருந்துவார்கள். சரியாக சிறுநீர் வராதவர்கள் வாழைத்தண்டை சாப்பிட்டால் சிறுநீர் தாராளமாகப் பிரியும். மலச்சிக்கலைப் போக்கும். நரம்புச் சோர்வையும் நீக்கும்.

வாழைத்தண்டு நார் சத்து மிக்கது. வாழைத்தண்டு குடலில் சிக்கிய மணல் கற்களை விடிவிக்கும் ஆற்றலை கொண்டது.

வறட்டு இருமல் நீங்க

வாழைத்தண்டுச் சாற்றை இரண்டு அல்லது 3 அவுன்ஸ் வீதம் தினமும் குடித்து வந்தால், அடிக்கடி வரும் வரட்டு இருமல் நீங்கும்.

பாம்பு கடிக்கு

நல்ல பாம்பு கடிக்கு வாழைத்தண்டுச் சாற்றை 1 டம்ளர் வீதம் கொடுத்தால் விஷம் தானாக இறங்கிவிடும்.

நீர் எரிச்சல்

வாழைத்தண்டை இடித்து , சாறு பிழிந்து அத்துடன் முள்ளங்கி சாறு அரை பாகம் சேர்த்து காலை, மாலை இரு வேளையும் 100 மி.லி. குடித்துவர கல்லடைப்பு நீங்கும். நீர் எரிச்சல், நீரில் ரத்தம் கலந்து போவதைக் குணப்படுத்தும்.

நீர்க்கட்டி

வயிற்றில் நீர்க்கட்டி இருந்தால், வெறும் வயிற்றில் வாழைத்தண்டு அதிகம் சேர்த்துக்கொள்வதன் மூலம் உடலில் உள்ள ந்ச்சுப் பொருளை வெளியேற்றி ஆரோக்கியம் தரும்.