அடிக்கடி தலை சுற்றல் வருகிறதா? இதுதான் காரணம்

image 1200x900
image 1200x900

பொதுவாக நம்மில் பலருக்கு அடிக்கடி தலைசுற்றுவது வழக்கம். இது ஒரு நோய் அல்ல. ஆனால் அது ஒரு அறிகுறி ஆகும்.

இதிலிருந்து விடுபட கண்ட கண்ட மருந்துகளை வாங்கி போடமால் வீட்டில் இலுக்கும் மருத்துவ பொருட்கள் கொண்டே சரி செய்யலாம்.

அந்தவகையில் தற்போது அடிக்கடி தலைசுற்றுவதை தடுக்க உதவும் சில வீட்டு வைத்தியங்களை தற்போது பார்ப்போம்.

ஒரு டம்ளர் நீரில் 1 தே.க உலர்ந்த லெமன் பாம் இலைகளை சேர்த்து 10-15 நிமிடம் குறைவான தீயில் கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி குடிக்க வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு சில முறை என சில வாரங்கள் தொடர்ந்து குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

ஒரு துண்டு இஞ்சியை வாயில் போட்டு மெல்லலாம் அல்லது இஞ்சி டீ தயாரித்தும் குடிக்கலாம்.

ஒரு டீஸ்பூன் மல்லி விதை மற்றும் ஒரு தே.க நெல்லிக்காய் பொடியை ஒரு டம்ளர் நீரில், இரவு தூங்கும் முன் நீரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். மறுநாள் காலையில் வடிகட்டி அந்நீரைக் குடிக்க வேண்டும். இப்படி சில நாட்கள் தொடர்ந்து செய்ய நல்ல பலன் கிடைக்கும்.

2 தே.க நல்லெண்ணெயில், 1 1/2 தே.க பட்டை பொடி மற்றும் 1 1/2 தே.க ஏலக்காய் பொடி சேர்த்து வெதுவெதுப்பாக சூடேற்றி, அந்த எண்ணெயை தலையில் தடவி, சிறிது நேரம் மசாஜ் செய்து, சில மணிநேரம் ஊற வைக்கவும். இப்படி ஒரு வாரத்திற்கு பல முறை என சில வாரங்கள் தொடர்ந்து செய்து வந்தால், வெர்டிகோவில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

3-4 துளசி இலைகளை ஒரு டம்ளர் நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்த பாலை இரவு தூங்கும் முன் குடிக்க வேண்டும். இப்படி சில வாரங்கள் குடித்து வந்தால், நல்ல மாற்றத்தைக் காணலாம்.