தக்காளி சாப்பிடுவது ஆபத்தானது: காரணம் இதுதான்

images 1 1
images 1 1

அன்றாடச் சமையலில் நாம் உபயோகப்படுத்தக்கூடிய காய்கறிகளில் ஒன்றாக தக்காளி உள்ளது. இது மிகவும் குளிர்ச்சியான பழம். இதை பலவிதங்களில் சமைத்து சாப்பிடலாம்.

இப்பழத்தின் சிறப்பு தன்மை என்னவென்றால், தனியே சாப்பிட்டாலும், சமையலுக்கு பயன்படுத்தி சாப்பிட்டாலும் அதன் சத்து குறைவதே இல்லை. இதில் பலவிதமான மருத்துவ குணங்கள் உள்ளன.

தக்காளியில் எண்ணற்ற சத்துக்கள் வைட்டமின்கள் அடங்கியுள்ளன. அதிலும் குறிப்பாக வைட்டமின் ஏ அதிகமாக அடங்கியுள்ளதால் கண் பார்வையை மேம்படுத்தும் சக்தி கொண்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் மாலைக்கண் வியாதியைத் தடுக்கும் ஆற்றலும் இவற்றிற்கு உண்டு.

நாம் தினமும் உட்கொள்ளும் உணவில் மிக பிரதானமாக சேர்க்கப்படுவது தக்காளி. குறைவான விலையாக இருந்தாலும், தக்காளி சாப்பிடுவதால் நம் உடலுக்கு கிடைக்கும் சத்துக்களோ மிக அதிகம்.

தக்காளியை தினமும் நம் உணவில் எடுத்துக்கொண்டால், எலும்பு தொடர்பான பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்கும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தக்காளி சாப்பிடுவது ஆபத்தானதல்ல ஆனால் அதிகளவில் எடுப்பது சிலருக்கு ஆபத்து கூட ஏற்படுத்தலாம்.

செரிமானம்

தக்காளியில் அதிக அளவு மாலிக் மற்றும் சிட்ரிக் அமிலங்கள் உள்ளது. தக்காளி உங்கள் உடலில் பல அமில மாற்றங்களை ஏற்படுத்தக்கூடியது. செரிமானம் தொடங்கியவுடன் தக்காளி இரைப்பையில் அதிக அமிலத்தாக்கங்களை ஏற்படுத்தும்.

தொண்டை எரிச்சல்

வாய் மற்றும் நாக்கில் வீக்கம், இருமல், சருமம் சிவப்பாக தடித்தல், தொண்டை எரிச்சல் போன்றவை இதனால் ஏற்படும் விளைவுகளாகும்.

சிறுநீரக பிரச்சனை

சிறுநீரக பிரச்சனையால் பாதிக்கப்பட்ட நோயாளிகளும் தக்காளியில் இருந்து விலகி இருக்க வேண்டும். உண்மையில், அமெரிக்க சுகாதார மற்றும் மனித சேவைகள் திணைக்களத்தின்படி, தக்காளியில் பொட்டாசியம் அதிகம் உள்ளது, எனவே நீண்டகால சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் தக்காளியை முழுவதுமாக தவிர்த்தல் நல்லது.

மூட்டு வலி

மூட்டு வலி மற்றும் வீக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தக்காளியை உட்கொள்ளக்கூடாது. தக்காளி காரப் பொருட்களால் நிறைந்துள்ளது, இது மூட்டு வலியை அதிகரிக்கும்.

மூட்டுகளில் ஏற்படும் இந்த வீக்கம் அதிக வலியை ஏற்படுத்துவதுடன் தினசரி வேலைகள் செய்வதையே கடனமாக்கிவிடும். தொடர்ந்து அதிக தக்காளி சாப்பிடும்போது அது வாதம் ஏற்பட வழிவகுக்கும்.

தக்காளியின் இலை

தக்காளியின் இலைகளை எக்காரணம் கொண்டும் உணவில் சேர்க்கக்கூடாது. தக்காளியின் இலைகளை உணவில் அதிகம் சேர்த்து வந்தால், உயிருக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

தக்காளி விதை

தக்காளியினுள் உள்ள விதைகளை அதிகமாக சாப்படுவதைத் தவிர்த்திடுங்கள். ஏனெனில் இந்த விதைகளெல்லாம் எளிதில் செரிமானமாகாமல் இருப்பதோடு, அவை சிறுநீரக கற்கள் உருவாக வழிவகுக்கும்.