அதிக சத்துக்களை கொண்ட பச்சை பயிறு

1562235024 1566
1562235024 1566

அதிகம் தண்ணீர் தேவைப்படாத பயிர் வகைகளில் ஒன்றான பச்சைப் பயிறு எல்லா வகை நிலங்களிலும் விளையக்கூடியது.

பயறு சாப்பிடுவோருக்கு பசியைத் தூண்டி, நல்ல ஊட்டமும், உடலுக்கு பலமும் தரும், இரத்த அழுத்த பாதிப்புகளை சரி செய்து, சிறுநீரை சீராக வெளியேற்றும், உடலின் பித்த கபத் தன்மைகளை சீராக்கும்.

சிறிய பீன்ஸ் வடிவில் இருக்கும், காய்களைப் பறித்து, காயவைத்து அதன் பின், அவற்றை அடித்து, பயறுகளை சேகரிப்பர். பயறு அறுவடைக்கு பின் ஆறு மாதங்கள் கழித்தே, உணவில் சேர்த்துக் கொள்ள சிறப்பாகும். பயிறு ஓராண்டு காலம் வரை அதன் தன்மை மாறாமல், வளமுடன் இருக்கும்.

பலவிதமான பயிறு வகைகளை சாப்பிடும்போது ஏராளமான சத்துக்கள் உடலுக்கு கிடைக்கின்றன. அதிலும் குறிப்பாக பருப்புக்களில் ஒன்றான பச்சை பயிறு மற்றும் பாசிப் பருப்பை தவறாமல் வாரம் ஒருமுறை உட்கொண்டு வந்தால், அதில் நிறைந்துள்ள சத்துக்களால் பல நன்மைகளை பெறலாம்..

உடல் எடையைக் குறைக்க

உடல் எடையைக் குறைக்க பச்சைப் பயிறு உதவுகிறது. இது பசியைத் தாங்கும் சக்தி கொண்டது. எனவே உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் சிறுபயிறை ஒரு நேர உணவாகச் சாப்பிட்டு வரலாம்.

தாய்ப்பால் சுரப்பு

பச்சைப்பயிறு, தேங்காய் மற்றும் ஏலக்காய் ஆகியவற்றை நன்கு அரைத்து பால் எடுத்துக்கொள்ளவும். அதனுடன் சர்க்கரை கலந்து சாப்பிட்டு வந்தால் பெண்களுக்கு தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.

எதிர்ப்பு சக்தி

உடலுக்கு வியாதி எதிர்ப்பு சக்தி உண்டாகி, உடலை வலுவாக்கி, சருமத்துக்கும், கேசத்துக்கும் ஏற்படும் பாதிப்புகளையும் அகற்றி, உடலை நலமுடன் செயல்பட வைக்கும்.

இரத்த சோகை நீங்க

தினசரி உணவுகளில் பச்சைப் பயிறை பயன்படுத்தி, உடலுக்கு தேவையான இரும்புச் சத்து கிடைத்து, இரத்த சோகை நீங்கி, நலமாகலாம்.

இரத்த அழுத்த பாதிப்புகள்

சிலருக்கு, இரத்தத்தில் கொலஸ்ட்ரால் எனும் கொழுப்பு அதிகம் கலந்து, இரத்த அழுத்த பாதிப்புகள் உண்டாகலாம், அவர்களும் பச்சைப் பயிறை உணவில் சேர்த்து, பாதிப்புகள் நீங்கி, நிம்மதி அடையலாம்.

குழந்தைகள் நன்கு வளர

உடல் வளத்தை பாதிக்கச் செய்யாமல், இயற்கை தந்த பச்சைப் பயிறு மாவை, சர்க்கரையில் இட்டு அந்த பானங்களை போல பாலில் கலந்து பருகி வர, குழந்தைகள் இயற்கையான முறையில் உடல் ஊட்டம் பெற்று, நன்கு வளருவர்.

தலைமுடி மிருதுவாக

பச்சைப் பயிறு மாவு மற்றும் பாலாடை கலந்து உடலில் தடவி, சற்று நேரம் கழித்து குளித்துவர, உடல் பொலிவாகும். இதையே, தலைக்கு தடவி குளித்து வர, தலைமுடிகளின் பிசுபிசுப்பு போய் தலைமுடி, மிருதுவாகும்.

மூச்சிறைப்பு

மூச்சிறைப்பு போன்ற வியாதிகள் உள்ளவர்கள், பச்சைப் பயிறை குறைந்த அளவில் உண்டு வர, நலம் பெறலாம்.

வாயுத் தொல்லை

வாயுத் தொல்லை உள்ளவர்கள், பயிருடன் இஞ்சி பூண்டு சேர்த்து சாப்பிட்டு வரலாம்.