நுளம்பின் தொல்லை இனியும் வேண்டாம்-இவற்றை செய்யுங்கள்

colmosquito 0161809089 5620119 13092017 SPP
colmosquito 0161809089 5620119 13092017 SPP

பொதுவாக மழை மற்றும் குளிர் காலத்தில் கொசுக்கள் அதிகமாக இருக்கும்.

அதுவும் இரவு நேரங்களில் தூங்க முடியாத அளவுக்கு கொசுக்கடி நம் உயிரை வாங்கும்.

கொசுக்கள் மூலமாக மக்களுக்கு டெங்கு, மலேரியா, சிக்குன் குனியா, யானைக்கால் போன்ற நோய்கள் பரவுகின்றன.

கொசுவை சில எளிமையான இயற்கை முறையை கொண்டு விரட்டிவிடலாம்.

எலுமிச்சை பழம் ஒன்றை இரண்டாக அறுத்து 8 அல்லது 10 இலவங்க பூவை வைத்து, வீட்டின் நடு பகுதியில் வைத்தால் கொசுகள் வீட்டுக்குள் வராது.

பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீரை ஊற்றிச் சூடாக்கி, அதில் வேப்ப இலைகளைப் போட்டு நன்கு கொதிக்க வைக்க வேண்டும். பிறகு கட்டி, கற்பூரம் ஒரு தேக்கரண்டி போட்டு கால் டம்ளர் அளவுக்கு நீர் சுண்டிய நிலையில் அதை வடிகட்டி, மின்சாரத்தில் இயங்கும் கொசு விரட்டி இயந்திரத்தில் ஊற்ற வேண்டும். பின்னர், அதனுடன் நறுமண எண்ணெய் சிறிது ஊற்றி படுக்கை அறையில் வைத்துப் பயன்படுத்தலாம்.

விளக்கெண்ணெய்யை ஊற்றி அதில் திரிக்கு பதில் குபேரன், பெருந்தும்பை, பேய் விரட்டி ஆகியவற்றின் பச்சை இலைகளைப் பறித்து, திரி போல சுற்றி விளக்கில் இட்டு எரிய விட்டால் கொசுக்கள், பூச்சிகள் வராது.

ஒரு லிட்டர் விளக்கெண்ணெய் (ஆமணக்கு எண்ணெய்), கால் லிட்டர் வேப்ப எண்ணெய் இரண்டையும் ஒன்றாகக் கலந்து வீட்டில் படுக்கை அறை, சமையல் அறையில் ஊற்றி பஞ்சு திரியிட்டு எரிய விட்டால், கொசுகள் உள்ளே வராது.