சமையலறையில் இதை செய்தால் வாழ்நாளில் கஷ்டமே வராது

worship 1
worship 1

நாம் வீட்டில் சமைக்கும் போது எல்லா நேரமும் நன்றாக அமைவதில்லை. மேலும் சமைக்கும் பொழுது முழு மனதுடன் நிதானமாக இருந்தால் மட்டுமே உணவு ருசிக்கும். மேலும் ஆன்மீக ரீதியில் சமைப்பதற்கு முன் சில பரிகாரங்களை செய்து வந்தால் வீட்டில் உள்ள வறுமை, கஷ்டங்கள் அனைத்தும் தீரும்.

சமைப்பதற்கு முன் செய்ய வேண்டியவை?..

சமையலறை என்பது எப்பொழுதும் பூஜையறைக்கு நிகரான ஒன்று. எனவே தான் அதனை சுத்தமாக வைத்திருப்பது அவசியம். மேலும் நாம் சமைக்கும் உணவுகளில் உப்பு, காரம் மட்டுமல்ல அன்பையும் சேர்த்து கொடுத்தால் அந்த உணவும் ருசிப்படும். இதனால் தான் அம்மாவின் கைப்பக்குவதில் சமைத்த உணவுக்கு தனி ருசி உள்ளது. மேலும் சமயலறை அன்ன பூரணியும், சூரிய பகவானும் குடி இருக்கும் இடம் என்றே சொல்லலாம்.

எனவே பூஜையறையில் விளக்கேற்றுவது போல சமையலறையிலும் விளக்கேற்றி வைத்தால் நல்ல பலன்களை தரும். அந்த விளக்கிற்கு மஞ்சள் குங்குமம் வைத்து நல்லெண்ணெய் அல்லது விளக்கிற்கு பயன்படுத்தும் எண்ணெயை ஊற்றி விளக்கேற்றி அன்னபூரணியை நினைத்து வழிபட வேண்டும். பிறகு சமையலை ஆரம்பிக்க வேண்டும். இதனால் சமையலும் ருசிக்கும்.

மேலும் வீட்டில் சாப்பாட்டிற்கு ஒரு நாளும் கஷ்டம் ஏற்படாது. மேலும் பாதுகாப்பாக விளக்கை ஏற்ற வேண்டும். ஏனெனில் சமையலறையில் எரிவாயு சாதனங்கள் உள்ளதால் விளக்கை சற்று தள்ளியே வையுங்கள். இதனால் உங்கள் வீட்டில் ஏற்படும் கஷ்டங்கள் அனைத்தும் நீங்கும்.