பத்த கோணாசனம் செய்வதால் ஏற்படும் பலன்கள்

9 4
9 4

பத்த கோணாசனம் செய்வதனால் பல்வேறு நன்மைகள் காணப்படுகின்றது மற்றும்” நீர்கட்டி, மாதவிடாய் பிரச்சனையை சரிசெய்ய உதவி புரிகின்றது.அத்துடன் அடிவயிற்றில் தசைகள் நன்றாக இயங்க செய்யவும், ரத்த ஓட்டமும் அதிகரிக்கவும் செய்கின்றது.

பத்த கோணாசன”பயிற்சியை எவ்வாறு செய்யலாம் என்று பார்க்கலாம்

செய்முறை :

625.0.560.350.160.300.053.800.668.160.90 3
625.0.560.350.160.300.053.800.668.160.90 3
  • முதலில் தரையில் அமர்ந்து கால்களை நீட்டிக் கொள்ளுங்கள். முதுகு நேராக இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.
  • ஆழ்ந்து மூச்சை இழுத்து விட வேண்டும். இப்போது இரு பாதங்களையும் பிடித்தபடி கால்களை மேலே படத்தில் உள்ளவாறு மடக்குங்கள்.
  • இரு கால்களும் மடக்கி சம நிலையில் வைத்திருங்கள். இருபாதங்களும் ஒன்றோடு ஒன்று பார்த்தபடி ஒட்டி இருக்கவேண்டும். கைகளால் பாதங்களை பொத்திக் கொள்ளுங்கள்.
  • இந்த நிலையில் முதுகை வளைக்காமல் நிமிர்ந்து இருக்க வேண்டும்.
  • முட்டிகள் தரையை தொடக் கூடாது. தொடைகளை மட்டும் சிறிது தரையில் தாழ்த்தினால் முட்டிகள் சம நிலையில் சரியாக இருக்கும்.
  • அந்த நிலையில் 5 நிமிடங்கள் இருக்க வேண்டும். பின்னர் முட்டிகளை உயர்த்தி, கால்களை விலக்கி இயல்பு நிலைக்கு வாருங்கள்.
பத்த கோணாசனத்தின் பலன்கள் :

மன அழுத்தம், தேவையில்லாத குழப்பங்கள், கருப்பை நீர்கர்ட்டி ஆகியவைகள் வராமல் தடுக்கும்.

அது போலவே முறையற்ற மாதவிலக்கு சீராகும்.

முடிஉதிர்தல், முகப்பரு, உடல் பருமன் ஆகியவைகளும் சீராகும். தினமும் இரு வேளைகள் செய்யுங்கள்.