10 நிமிடத்தில் பல் வலி குணமாக இதை செய்யுங்கள்

9d5d951def49952fca73a5d1ccead984
9d5d951def49952fca73a5d1ccead984

பற்கள் சுத்தமின்மை காரணத்தினால், தாங்க முடியாத பல்வலி, ஈறுகள் வீக்கம் போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது. ஆனால் அந்த பிரச்சனைகளை குணமாக்க, இயற்கையில் உடனடி தீர்வுகள் உள்ளது.

பல்வலி பிரச்சனையை குணமாக்கும் தீர்வுகள்

நமது பற்களின் கீழ் பகுதியில், ஒரு வெங்காயத்தை மெல்லிசாக நறுக்கி வைத்தால், தாங்க முடியாத பல்வலி உடனே குறையும்.

பல்வலி ஆரம்பம் ஆகும் போதே, ஒரு வெங்காயத்தை எடுத்து வாயில் போட்டு மெல்ல வேண்டும். இதனால் பற்களின் வலியை அதிகரிக்க செய்யாமல் தடுக்கலாம்.

ஒரு காட்டன் பஞ்சை கொண்டு 3 சொட்டு கிராம்பு எண்ணெயில் நனைத்து, அதை பல்வலி உள்ள இடத்தில் தேய்த்து கொடுத்தால், உடனடி நிவாரணம் கிடைக்கும்.

தாங்க முடியாத பல்வலியின் போது, ஒரு வெள்ளரிக்காயை மெல்லிசாக நறுக்கி, அதை பற்களுக்கு அடியில் சிறிது நேரம் வைத்திருக்க வேண்டும். இதனால் பல்வலி குறைந்துவிடும்.

பல்வலி அதிகமாக இருந்தால், இஞ்சியை சிறிய துண்டாக நறுக்கி, அதை பல்வலி உள்ள இடத்தில் வைத்து, மெல்ல வேண்டும்.

குறிப்பு
காலையில் பற்களை சுத்தம் செய்வதை விட, இரவில் தவறாமல் சுத்தம் செய்ய வேண்டும். பின் காலையில் சுடுநீருடன், உப்பு கலந்து வாய் கொப்பளிக்க வேண்டும்.