எவ்வாறான உணவுகளை உண்பதன் மூலம் மார்பக புற்றுநோய் ஏற்படும்!

6 6
6 6

இன்றைய காலத்தில் பல பெண்களை அச்சுறுத்தும் கொடிய நோயாக மார்பக புற்றுநோய் காணப்படுகின்றது. கருப்பைப் புற்றுநோயை விட அதிகம் பாதிக்கின்ற நோயாக மார்பகப் புற்றுநோய் அமைகின்றது.

ஆனால் வாழ்க்கை முறை மாற்றம், மது பழக்கம், உடல் பருமன், அதிக கொழுப்பு சத்துள்ள உணவுகளை அதிகம் உட்கொள்வது, உடற்பயிற்சியின்மை, ஹோர்மோன் சுரப்பில் குறைபாடு, சுற்றுச்சூழல் பாதிப்பு, இரசாயனம் கலந்த உணவு பொருளை பயன்படுத்துவது என பல காரணிகளை மார்பகப் புற்றுநோய்க்கு காரணமாகும்.

அதிகப்படியான குடிப்பழக்கம், ஈஸ்ட்ரோஜன் மற்றும் ‘ ஹார்மோன் ரெசெப்ட்டார் பாசிட்டிவ்’ மார்பக புற்றுநோயுடன் தொடர்புடைய பிற ஹார்மோன்களின் அளவை அதிகரிக்கக் கூடும். மதுபானமானது உயிரணுக்களில் உள்ள டி.என்.ஏ வை சேதப்படுத்தும். மேலும் இதன் காரணமாக, மார்பக புற்றுநோய் அபாயத்தை இது அதிகரிக்கும்.

இதிலும் இன்றைய காலத்தில் நாம் சாப்பிடும் உணவுகளே நமக்கு எதிரியாக விட்டது. இதிலிருந்து தப்பிக்க வேண்டும் என்றால் சில உணவுகளை நாம் அவசியம் தவிர்க்க வேண்டும்.

எவ்வாறான உணவுகளை உண்ணபதன் மூலம் மார்பக புற்றுநோய் ஏற்படும்

  • அதிக துரித உணவை உட்கொள்வது உங்கள் உடல் எடையை அதிகரிக்கக் கூடும். மற்றும் நீங்கள் அதிக எடை அல்லது பருமனா உடலை பெற வாய்ப்பு உள்ளது. இது மார்பக புற்றுநோய் ஆபத்து காரணிகளில் ஒன்றாகும். மேலும், அதிக கொழுப்பு நிறைந்த உணவுகள் இதய நோய், நீரிழிவு நோய் போன்ற நோய்களின் அபாயத்துடன் தொடர்புடையது.
  • அதிகமான அளவில் வறுக்கப்பட்ட உணவுகளை உட்கொள்ளவது உங்கள் மார்பக புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கக் கூடும்.
  • அதிகப்படியாக வறுக்கப்பட்ட சிவப்பு இறைச்சியை அதிக அளவில் உட்கொள்வது, மார்பக புற்றுநோயின் அபாயத்தை ஏற்படுத்தும். ஹைட்ரஜனேற்றப்படாத சோயாபீன் எண்ணெயை அதிக வெப்பநிலை கொண்ட சமையலில் பயன்படுத்துவது மார்பக புற்றுநோயின் அபாயத்துடன் அதிகளவு தொடர்புடையது.
  • பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளான பன்றி இறைச்சி , சாஸேஜஸ் மற்றும் ஹாம் போன்றவற்றை அடிக்கடி சாப்பிடும் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
  • அதிகப்படியான சர்க்கரையை உட்கொள்வது, உங்கள் உடல் எடையை அதிகரிக்கும் மற்றும் உடல் பருமனுக்கு வழிவகுக்கும், இது மார்பக புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு புற்றுநோய்களின் அபாயத்தை அதிகரிக்கும்.
  • வெள்ளை ரொட்டி மற்றும் அதிகம் சர்க்கரை கொண்டு வேகவைத்த அல்லது சுட்ட பொருட்கள் போன்ற சுத்திகரிக்கப்பட்ட கார்ப்ஸை உட்கொள்வது மார்பக புற்றுநோய் ஏற்பட அதிகம் வாய்ப்பாக அமைகிறது.