வாழைப்பழத்தை வேக வைத்த நீரை பருகினால் ஏற்படும் நன்மைகள்

33
33

இன்றைய கால கட்டத்தில் மன அழுத்தம், பதட்டம், வேலை பளு, ஸ்மார்ட் போன் மற்றும் கணினி பயன்பாடு போன்ற பல காரணங்களால் பலரும் உறக்கத்தை தொலைத்து தவிக்கின்றனர். குறிப்பாக தூக்கமின்மையால் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, சோர்வு போன்ற நோய்களால் அவதிப்பட வேண்டியிருக்கும்.

நல்ல தூக்கம் வேண்டும் என்று நினைத்தால் ஆரோக்கியமான உணவுகளை எடுத்து கொள்வது அவசியமாகும். அதிலும் சில உணவுகளில் இருக்கும் மருத்துவ குணங்கள் கூட இந்த தூக்கமின்மையை சரி செய்ய உதவும். அதில் வாழைப்பழம் பெரிதும் உதவி புரிகின்றது.

வாழைப்பழத்தை வேக வைத்த நீரை பருகினாலே உறக்கம் நன்றாக வரும் என்று சொல்லப்படுகின்றது. இதன் செய்முறை மற்றும் கிடைக்கும் நன்மை என்ன என்பதை பார்க்கலாம்

தேவையான பொருட்கள்
  • வாழைப்பழம் ஒன்று
  • ஒரு கிளாஸ் நீர்
  • இலவங்கப் பட்டை சிறிதளவு (தேவை என்றால்)
செய்முறை
  • வாழைப்பழத்தின் இரு முனைகளையும் வெட்டிவிடுங்கள். பிறகு வாழைப்பழத்தை நீரில் வேக வையுங்கள்.
  • குறைந்தது 10 நிமிடங்களாவது வாழைப்பழம் நீரில் வேக வேண்டும். பிறகு தேவை என்றால் பொடித்த இலவங்கப் பட்டையை தூவவும்.
  • தினமும் இரவு உறங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னர் இந்த வாழைப்பழம் வேக வைத்த நீரை குடித்து வந்தால், தூக்கமின்மை பிரச்சனையில் இருந்து விரைவாக வெளிவரலாம். மேலும், மனநிலை மேலோங்கவும், நிம்மதியாகவும் உணர இது பயனளிக்கிறது.
நன்மைகள்
  • 01. வாழைப்பழத்தின் அடங்கிய பொட்டாசியம் மற்றும் மெக்னீசியத்தின் கலவையானது உங்கள் தசைகளை இலகுவாக உணர உதவுகிறது.
  • 02. மெக்னீசியத்தில் இருந்து கிடைக்கும் கனிம சத்துக்கள் நீங்கள் ரிலாக்ஸாக இருக்க உதவுகிறது. மேலும், வாழைப்பழம் 100% இயற்கையானது, ஆரோக்கியமானது.