ஒருநாள் தூங்காமல் இருந்தால் என்னவாகும்

download 27
download 27

ஒரு ஆரோக்கியமான மனிதனுக்கு சரியான தூக்கம் அவசியமாகும்.

தொடர்ச்சியான தூக்கமின்மை உடலில் டயாபெட்டீஸ், உடல் பருமன் மற்றும் இதய நோய்களை கொண்டு வந்து சேர்ந்திடும்.

ஒரு நாள் தூக்கமின்மையால் கூட உடலுக்கு பிரச்சினைகள் ஏற்படும் அவையாவன

குறைந்தது ஐந்து மணி நேர தூக்கம் அல்லது அதிகமான ஒன்பது மணி நேரம் தூக்கம் உடல் பாதிப்புகளை உண்டாக்குகின்றது . இவை இதய நோய்கள் மற்றும் குறைந்த தூக்கத்தால் வலிப்பு நோய்கள் போன்றவை ஏற்பட காரணமாக அமைகிறது.

குறைந்த அளவு தூக்கத்தால் மார்பக புற்று நோய், குடல் புற்று நோய் மற்றும் புரோஸ்டேட் புற்று நோய் போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளது.

குறைவான தூக்கம் உங்கள் மூளையின் செயல்திறனை பாதித்து சரியாக சிந்தனை செய்ய விடாமல் தடுக்கிறது.

தூக்கமின்மை உங்கள் நினைவாற்றல் திறனை பாதிக்கிறது. தூக்கமின்மை நமது மூளையின் செயல்திறனை குறைத்து விடுகிறது.

சரியான தூக்கமின்மை நமது இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை அதிகரித்து டயாபெட்டீஸ் நோய் ஏற்பட வைத்து விடுகிறது.

தூக்கமின்மை பிரச்சினை உங்கள் அழகையும் பாதிக்கிறது. சரியான அளவு தூங்காமல் இருப்பது வயதான தோற்றத்தை ஏற்படுத்துகிறது.

போதிய அளவு தூக்கம் இல்லாமல் இருப்பது உங்கள் ஆற்றல் குறைவு , சோர்வு மற்றும் மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இதனால் உறவுகளுக்கிடையே பல சிக்கல்களை உண்டாக்குகிறது.