சேற்று புண் குணமாக வீட்டு வைத்தியம்!

1568269078 6445
1568269078 6445

சேற்றுப் புண் என்பது பொதுவாக மனிதர்களுக்கு கால் விரல்களுக்கு இடையே உள்ள சவ்வுப் பகுதிகளில் ஏற்படும் புண்ணைக் குறிக்கும் மழைக்காலங்களில் இது பெரும்பாலானோர்க்கு கால்களில் வரும்.

சேற்றுப் புண் என்பதை நீர்ச் சிரங்கு என்றும் சொல்லுவார்கள். இது ஒரு பங்கஸ் கிருமியால் எற்படும் நோயாகும்.

இந்த பூஞ்சை தொற்று விரைவாக வேகமாக பரவக் கூடிய தொற்றாகவும் உள்ளது. இந்த பூஞ்சை தொற்று ட்ரைகோபைத்தான் ரூபிரம் என்ற பூஞ்சை வைரஸால் ஏற்படுகிறது.

இந்த தொற்று பயப்படக்கூடிய அளவில் விளைவை ஏற்படுத்தா விட்டாலும் இது அப்படியே உடம்பின் மற்ற பாகங்களுக்கு பரவமும் மற்றவர்களுக்கு பரவமும் வாய்ப்புள்ளது.

எனவே இதை சரியான நேரத்தில் கண்டறிந்து அதற்கான சிகிச்சையை மேற்கொள்வது நல்லது.

அந்தவகையில் தற்போது சேற்றுப் புண்ணை சரிசெய்ய என்ன செய்யலாம் என்பதை பற்றி பார்ப்போம்.

கால் டம்ளர் நீரை கொதிக்க வைத்து மஞ்சள் தூளை குழைத்து வெதுவெதுப்பாக இருக்கும் போதே சேற்றுப்புண் மீது தடவி கொள்ள வேண்டும்.

இரவு முழுவதும் காய்ந்தால் மறுநாளே இந்த புண் ஓரளவு மட்டுப்படும்.

வேப்பிலையை சுத்தம் செய்து அம்மியில் வைத்து அரைத்து அதனுடன் மஞ்சளை சேர்த்து குழைத்து சேற்றுப்புண் இருக்கும் இடங்களில் தடவவேண்டும்.

இவை உடலை சுத்தம் செய்வது போன்று கால்களில் இருக்கும் பூஞ்சை தொற்றையும் சுத்தம் செய்யும்.

அகலமான பாத்திரத்தில் வெதுவெதுப்பான நீர் சேர்த்து அதில் பிடியளவு உப்பு சேர்க்கவும். அதில் கால்களை நனைத்து ஊறவைத்து பத்து நிமிடங்கள் வரை வைத்திருந்து சுத்தமான துணியால் துடைத்து எடுக்கவும். அதன் பிறகு மருந்து வைக்கலாம்.

மருதாணி இலையுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து சேற்றுப்புண் இருக்கும் இடங்கள் முழுக்க தடவ வேண்டும். காலையில் எழுந்ததும் கால்களை கழுவி விடவும்.இரண்டே நாளில் மாற்றம் தெரியும்.

கால் விரல்கள் இடுக்குகளில் தேங்காயெண்ணெய் கலந்து பிறகு குளிக்கலாம். இன்னும் பாதுகாப்பு தேவையெனில் தேங்காயெண்ணெயோடு மஞ்சளை குழைத்தும் பூசி பிறகு குளிக்கலாம். அதற்கு மாற்றாக வேப்ப எண்ணெய் கலந்தும் பூசலாம்.