கைகள் கருப்பாக உள்ளதா? இதை செய்தால் அற்புதம் நடக்கும்

Hand Care Tips for Winter
Hand Care Tips for Winter

சிலரது முகம் பார்ப்பதற்கு பளிச்சென்று வெள்ளை நிறமாக இருக்கும்.

ஆனால், கை கால்கள் மற்றும் கழுத்து போன்றவை அதற்கு எதிர்மாறாக இருக்கும்.

காரணம் நாம் வெயிலில் அதிகமாக செல்லும்போது, நாம் ஆடை அணிந்திருக்கும் பகுதிகள் தவிர மற்ற இடங்களில் வெயில் படுவதால் கறுப்பாக தெரிகிறது.

தயிருடன் சிறிது மஞ்சள் தூள் கலந்து, அவற்றை மாலை வேளைகளில் கைகளில் தடவி 20-30 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், கைகளில் உள்ள கருமையைப் போக்கலாம்.

தக்காளியை வெட்டி, அதனை கருமையாக உள்ள கைகளில் தேய்த்து 15-20 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி செய்வதால் அதில் உள்ள அமிலம் கைகளில் உள்ள கருமையை மறைக்கும்.

பாதாமை இரவில் படுக்கும் போது சிறிது பாலில் ஊற வைத்து, மறுநாள் காலையில் அதனை பால் ஊற்றி அரைத்து கைகளில் தடவி உலர வைத்து, பின் கழுவ வேண்டும்.

இச்செயலை தினமும் செய்து வந்தால், கைகளில் உள்ள கருமை நீங்குவதோடு, கைகளும் மென்மையாக இருக்கும்.

பப்பாளியில் சரும கருமையைப் போக்கும் பொருள் உள்ளது. எனவே பப்பாளியை அரைத்து கைகளில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து கழுவி வர, கைகள் வெள்ளையாகும்.

மஞ்சள் தூளில் சரிசம அளவில் பால் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து கைகளில் தடவி உலர வைத்து கழுவினால், வெயிலால் கருமையடைந்த கைகளை வெள்ளையாக்கலாம்.

கற்றாழை ஜெல்லை தினமும் கைகளில் தடவி உலர வைத்து கழுவி வந்தால், கருமையைப் போக்கி கைகளின் நிறத்தை அதிகரிக்கலாம்.