நித்திரை விட்டு எழுந்த 60 நொடிகளில் தண்ணீர் குடித்தால் நடக்கும் அற்புதங்கள்

download 35
download 35

காலையில் படுக்கையில் இருந்து தூங்கி எழுந்தவுடன் ஒருசிலர் தேநீர் குடிப்பார்கள். இன்னும் சிலர் தண்ணீரை குடிப்பார்கள்.

தினமும் காலையில் எழுந்த 60 நொடிகளில் தண்ணீர் குடிப்பதால் உடலில் பல்வேறு நன்மைகள் ஏற்படுகின்றது.

காலையில் எழுந்ததும் 300 மி.லி அளவு நீர் குடித்தால், ஒன்றரை மணி நேரத்தில் நமது உடலில் ஏற்படும் வளர்சிதை மாற்றத்தை 24% வரை அதிகம் அதிகரிக்கச் செய்கிறது.

தண்ணீர் குடிப்பதால், நமது உடம்பின் ரத்தத்தில் உள்ள நச்சுக்கள் மற்றும் உடலில் தேவையின்றி தேங்கியிருக்கும் கழுவுகளை போக்கி, நமது உடலின் செயல்திறனை ஊக்குவிக்கிறது.

தூங்கி எழுந்ததும் 60 நொடிகளில் நீர் குடித்து வருவதன் மூலம் பசியின் அளவைக் குறைத்து, அதிக அளவு உடல் பருமன் ஏற்படுவதைக் குறைக்கிறது.

காலையில் நீர் அதிகமாக குடிப்பதால், நமது உடலில் நீர்ச்சத்துக்கள் அதிகரித்து நோய் எதிர்ப்பு சக்திக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாமல், நிணநீர் மண்டலத்தை வலுவடையச் செய்கிறது.

தினமும் நாம் காலையில் சீரான அளவில் தண்ணீரைக் குடித்து வந்தால், நமது உடலின் சருமத்தில் அதிக சுருக்கம் மற்றும் வறட்சியை ஏற்படுத்தாமல் மிருதுவான சருமத்தை தருகிறது.