கறுப்பு திராட்சை சாப்பிடுவதனால் கிடைக்கும் நன்மைகள்

625.500.560.350.160.300.053.800.748.160.703 19
625.500.560.350.160.300.053.800.748.160.703 19

கறுப்பு நிற திராட்சையை ஒருவர் தினமும் சாப்பிட்டு வந்தால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும்

அந்தவகையில் கறுப்பு திராட்சை சாப்பிடுவதனால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை பற்றி பார்ப்போம்.

  • திராட்சை இயற்கையாகவே செரிமான சக்தி கொண்டு காணப்படுகிறது. இது குடலின் இயக்கத்தை மேம்படுத்துகிறது. மேலும் நமது உடலில் இருந்து சீராக மலம் வெளியாக இது உதவிப்புரிகிறது.
  • திராட்சை மலச்சிக்கல், வயிற்று வலி, குடலில் எரிச்சல், வீக்கம் மற்றும் வாய்வு போன்ற இரைப்பை மற்றும் குடல் பிரச்சனைகளுக்கு நிவாரணம் அளிக்கிறது.
  • நீங்கள் உடல் எடையை அதிகரிக்க திராட்சை உஙகளுக்கு சிறந்த நண்பனாக இருக்கும். திராட்சையில் பிரக்டோஸ் மற்றும் குளுக்கோஸ் அதிகமாக நிறைந்துள்ளன. மேலும் இவை உங்களுக்கு அதிக ஆற்றலை கொடுக்கும். உங்கள் உடலில் மோசமான கொழுப்பு அதிகரிக்காமல் உடல் எடை அதிகரிக்க இது உதவி செய்யும்.
  • திராட்சையில் உள்ள கேடசின்கள் ஆக்ஸிஜனேற்ற சேர்மங்களான பாலிபினாலை உற்பத்தி செய்கின்றன. இது புற்றுநோய் செல்களைத் தாக்கி அழிக்கக்கூடிய ஆற்றல் கொண்டது. குறிப்பாக நுரையீரல் புற்றுநோய்க்கு நல்ல தீர்வாக இந்த திராட்சை இருக்கிறது.
  • திராட்சையில் அதிக பொட்டாசியம் உள்ளது. இது நமது ரத்த நாளங்களில் தளர்வை ஏற்படுத்தி இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது, உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இது உதவி புரிகிறது. மேலும் இரத்த நாளங்களில் ஏற்படும் விறைப்பை குறைக்கிறது. இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது. மேலும் உயர் ரத்த அழுத்தத்திற்கான அபாயத்தை குறைக்கிறது.
  • திராட்சைகளில் பக்டீரியா எதிர்ப்பு, வைரஸ் எதிர்ப்பு மற்றும் பூஞ்சைகளை எதிர்க்கும் பண்புகள் உள்ளன. இதனால் திராட்சை உடலில் பல்வேறு நோய் தொற்றுகள் ஏற்படுவதற்கான அபாயத்தை குறைக்கிறது.
  • மூட்டுவலி மற்றும் கீல்வாதம் போன்ற அழற்சி பிரச்சனைகளால் ஏற்படும் வலிகளுக்கு நிவாரணியாக திராட்சை செயல்ப்படுகிறது. இதில் வைட்டமின் சி மற்றும் பாலிபினால்கள் போன்ற ஆன்சி ஆக்ஸிடன்ட்கள் சுழற்சியால் ஏற்படும் கீல்வாதம் மற்றும் அதனால் ஏற்படும் வலி ஆகியவற்றை நீக்குகிறது.
  • திராட்சை ஹீமோகுளோபின் உற்பத்தியை அதிகரிப்பது மட்டுமல்லாமல் வளர்சிதை மாற்றத்தையும் மேம்படுத்துகிறது. மேலும் இது ஆக்ஸிஜனை கொண்டு செல்கிறது. இது நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதோடு சிறந்த தூக்கத்தையும் அளிக்கிறது.