கடலை மாவை பயன்படுத்தி கூந்தலை பொலிவாக்க இயற்கை குறிப்புகள்!

2019 10 02 at 19 14 37 265x198 1
2019 10 02 at 19 14 37 265x198 1

எல்லாருக்கும் கடலை மாவு என்றாலே முகம் பளபளக்கும் சருமத்திற்கும் தான் என்று தெரியும். ஆனால் இந்த கடலை மாவை கொண்டு உங்கள் கூந்தலை கூட பொலிவாக்கலாம்.

பண்டைய காலத்தில் இருந்து கடலை மாவு அழகு பராமரிப்புக்கு என்றே பயன்பட்டு வருகிறது.

இதிலுள்ள போஷாக்குகள் உங்கள் கூந்தலை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. வலிமையான மற்றும் அடர்த்தியான பொலிவான கூந்தலை பரிசாக அளிக்கிறது.

கடலை மாவு மற்றும் தயிர் சேர்ந்த கலவை
கூந்தலை புதுப்பித்து கூந்தல் வளர்ச்சியை தூண்டுகிறது. தயிரில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் நல்ல பக்டீரியா தலை மற்றும் கூந்தலில் உள்ள அழுக்குகளை போக்கி சுத்தம் செய்கிறது. தலை அரிப்பு போன்றவை இருந்தால் இதனுடன் கொஞ்சம் மஞ்சள் சேர்த்து கொள்ளுங்கள். கடலை மாவு மற்றும் தயிர் மாஸ்க்கை நீங்கள் சாம்பு மற்றும் கண்டிஷனர் மாதிரி கூட பயன்படுத்தி பலன் பெறலாம்.

பயன்படுத்தும் முறை
கொஞ்சம் கடலை மாவு மற்றும் தயிர் சேர்த்து நன்றாக கலக்கவும் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கொள்ளுங்கள் பேஸ்ட்டை முடியில் அப்ளே செய்து 30 நிமிடங்கள் அப்படியே வைத்து இருக்க வேண்டும் பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.