12 வகை நோய்களை தீர்க்கும் எளிய பாட்டி வைத்திய குறிப்புகள்!

download 18
download 18

அன்றைய காலங்களில் சிறு தலைவலி என்றால் கூட வீட்டில் இருக்கும் மருத்துவ பொருட்களை தான் வைத்தியம் செய்தனர்.

நாம் என்னதான் நவீன காலத்தை நோக்கி மாறிக்கொண்டே இருந்தாலும், நம்முடைய சில பழங்கால பழக்கவழக்கத்தை விட்டு மட்டும் மாறுவதில்லை அவற்றில் ஒன்றுதான், பாட்டி வைத்தியம்.

பாட்டி வைத்தியங்களை இன்றைய காலங்களில் கூட காலங்காலமாக பின்பற்றி வருகின்றனர்.

இதனடிப்படையில் 12 வகையான நோய்களை தீர்க்கும் சில பாட்டி வைத்தியங்களை இங்கு பார்ப்போம்.

கற்பூரவல்லி இலைச்சாறு, நல்லெண்ணெய், சர்க்கரை ஆகியவற்றை ஒன்றாக கலந்து நெற்றியில் பற்றுப் போட்டு வந்தால் தலைவலி குணப்படும்.

மோரில் உப்பு சேர்த்து 5 நிமிடம் வரை வாயில் வைத்திருந்து, பின்பு வாய் கொப்பளிக்க வேண்டும். இந்த முறையை ஒரு வாரம் வரை தொடர்ந்து செய்து வர வாய் புண் குணமாகும்.

பல் வலி ஏற்படும் போது சிறிது மிளகுத்தூளில் கிராம்பு எண்ணெய் கலந்து வலி இருக்கும் பல்லில் தடவி வந்தால் வலி குறையும்.

கிராம்பை இடித்து பொடி செய்து கொள்ளவும். அந்த பொடியுடன் பனங்கற்கண்டு சேர்த்து பாலில் கலந்து காய்ச்சி சாப்பிட்டால் வறட்டு இருமல் குணமாகும்.

விக்கல் வரும்போது 1 கிண்ணம் அளவு தயிரை எடுத்து 1 தேக்கரண்டி உப்பு சேர்த்து கலந்து மெதுவாக குடித்து வர விக்கல் குணமாகும்.

வெற்றிலை சாறை கொதிக்க வைத்து அந்த சாறை நெற்றியில் பற்றுப் போட்டு வந்தால் ஓயாத சளி குணமாகும்.

ஆமணக்கு எண்ணெயை கழுத்தில் சுளுக்கு ஏற்பட்ட இடத்தில் தடவி அதன் மேல் புளிய இலையை ஒட்ட வைத்து இரண்டு மணிநேரம் கழித்து வெந்நீரால் உருவி விட்டால் கழுத்தில் ஏற்பட்ட சுளுக்கு குறையும்.

வெங்காயத்தை தோல் உரித்து அதில் சிறிதளவு உப்பைப் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேக வைக்க வேண்டும். நன்றாக வெந்தவுடன் அந்த நீரை வடிகட்டிக் கொள்ளவேண்டும். வெங்காய தண்ணீரை எடுத்து இரவில் உண்ணும் சுடுசோற்றில் கலந்து சாப்பிட்டு வந்தால் தூக்கமின்மை குறையும்.

கண்டங்கத்திரிப் பூ, நல்லெண்ணெய், வேப்ப எண்ணெய் ஆகியவற்றை சேர்த்து காய்ச்சி மூலத்தில் தடவி வந்தால் மூலநோய் குறையும்.

பத்து பதினைந்து கருஞ்சீரக விதைகளை மென்று தின்று வந்தால் நினைவாற்றல் பெருகும்.

ஒற்றை தலைவலி ஏற்படும் போது கரட் சாறில் சிறிது வெள்ளரிகாய் சாறு மற்றும் பீட்ரூட் சாறு கலந்து குடித்து வந்தால் ஒற்றை தலைவலி குறையும்.

அத்திக்காயை எடுத்து நன்றாக அரைத்து வடிகட்டி அதன் சாறை கால் ஆணி மீது தடவி வந்தால் கால் ஆணி குறையும். கால் மிருதுவாகும்.