வெங்காய தோலில் உள்ள நன்மைகள்!

pic 1
pic 1

உணவுகளில் முக்கிய இடத்தை வகிக்கும் இரண்டு பொருட்கள் வெங்காயமும், பூண்டும். இந்த இரண்டு பொருட்களும் எண்ணற்ற மருத்துவ பயன்களை கொண்டவை.

அதிலும் வெங்காயம் இல்லாத சமையல் என்பது சுவையில்லாத ஒன்றாகவே கருதப்படுகிறது.

நம் முன்னோர்கள் இந்த இரண்டு பொருட்களையும் உணவில் சேர்க்க காரணம் இவற்றின் சுவை மட்டுமல்லாமல் அவற்றின் ஆரோக்கிய குணங்களும்தான். வெங்காயத்தின் ஆரோக்கியத்தை பற்றி நாம் ஓரளவு அறிந்து வைத்திருந்தாலும் நாம் பலரும் அறியாத ஒரு விடயம் இவற்றின் தோல்களிலும் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளது.

அவற்றை பற்றித்தான் இங்கு பார்க்க போகிறோம்.

அதிக ஊட்டச்சத்துக்கள் வெங்காயம் மற்றும் பூண்டின் தோலில் பல ஊட்டச்சத்துக்கள் உள்ளது. சொல்லப்போனால் வெங்காயத்தை விட அதன் தோலில் அதிக சத்துக்கள் உள்ளது.

எனவே கறிக்குழம்பு சமைக்கும்போது அவற்றின் மேல் தூவி கொதிக்க வைக்கவும். சமைத்து முடித்தவுடன் இவற்றை தூக்கி எறிந்துவிடலாம்.

பூண்டை வறுக்கும்போது அதன் தோலை நீக்காமல் வறுக்க பழகுங்கள். ஏனெனில் இது பூண்டின் மேற்புறத்தில் உள்ள சத்துக்கள் வீணாவதை தடுப்பதோடு பூண்டை உள்ளே மென்மையாகவும் மாற்றுகிறது. அதன் பின் வேண்டுமானால் தோலை உறித்து எறிந்துவிடலாம்.

சாதம் வடிக்கும்போது அதில் சில வெங்காய தோல்களை சேர்த்து சமைக்கும்போது அது சாப்பாட்டிற்கு அதிக ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது.

சாப்பாடு வெந்து இறங்கியவுடன் இந்த தோல்களை எளிதாக பொறுக்கி எடுத்துவிடலாம். இது சாதத்தில் உள்ள கார்போஹைட்ரேட் அளவை குறைத்து வைட்டமின்களின் அளவை அதிகரிக்கிறது.

வெங்காயத்தின் தோல் குணப்படுத்தும் தன்மை கொண்டது. சருமத்தில் ஏற்படும் வீக்கம், அரிப்பு, தடிப்பு போன்றவற்றை குணப்படுத்தக்கூடும். இவ்வாறு பாதிக்கப்பட்ட இடங்களில் வெங்காயத்தோலை வைத்து தேய்ப்பது விரைவில் நிவாரணத்தை வழங்கும்.