ஜாதிக்காய் மருத்துவமும் அதன் பயன்களும்!

ஜாதிக்காய் ஓரு அறிய மற்றும் பல்வேறு நற்குணங்கள் கொண்ட ஒரு வகை மூலிகையாகும்.

இதனை சரியான முறையில் பயன் படுத்தி வந்தால், அதனால் உண்டாகும் நன்மைகள் எண்ணிலடங்காதவையாக இருக்கும்

பாரம்பரியமாக மருத்துவம் சார்ந்த கைவைத்தியத்துக்கு பயன்படும் ஒரு அற்புத பொருளாகும்.

இது ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி முகத்தில் உண்டாகும் பிரச்சனைகளுக்கும் தீர்வு காண முடியும்.

அந்தவகையில் சரும பிரச்சனை இருந்தால் ஜாதிக்காயை எப்படி பயன்படுத்தலாம் என இங்கு பார்ப்போம்.

இலவங்கப்பட்டை , ஜாதிக்காய் தூள், தேன் மூன்றையும் சம அளவு எடுத்து எலுமிச்சை சாறு சில துளி சேர்த்து நன்றாக கலக்கவும். இரவு தூங்குவதற்கு முன்பு கருப்பு புள்ளிகள் இருக்கும் இடத்தின் மீது தடவி விடவும். மறுநாள் காலை மிதமான நீரில் கழுவி எடுக்கவும். தொடர்ந்து செய்தால் கருப்பு புள்ளிகள் மறையக்கூடும்.

தேங்காய்ப்பாலில் ஜாதிக்காய் தூள் கலந்து முகம் முழுக்க தேய்க்க வேண்டும். இது நல்ல மாற்றத்தை கொடுக்கும். சருமத்தின் ஆழம் வரை சென்று சுத்தம் செய்யும். சருமத்தின் மூன்று அடுக்குகளிலும் சிகிச்சையளிக்கும். காய்ச்சாத பாலையும் பயன்படுத்தலாம். ஆனால் பலன் வேகமாக கிடைக்க தேங்காய்ப்பால் பயன்படுத்துங்கள். ஒரு முறை பயன்படுத்தினாலே முகம் எப்போதும் பளிச் என்று இருக்கும்.

ஜாதிக்காய் தூள், தேன் இரண்டையும் சம அளவு கலந்து முகத்தில் பத்து நிமிடங்கள் வரை மசாஜ் செய்து விடவும். இவை இரண்டுமே பக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி பண்புகளை கொண்டிருப்பதால் அது சருமத்தை முகப்பருவிலிருந்து பாதுகாக்க செய்யும். எண்ணெய்ப்பசையை போக்கும்.

ஜாதிக்காய் தூள், கெட்டியான தயிர், தேன் மூன்றையும் சம அளவு எடுத்து நன்றாக கலந்து கழுத்து பகுதியில் தடவி 15 நிமிடங்கள் ஊறவைத்து மந்தமான நீரில் கழுவினால் சுருக்கங்கள் விழுவது தள்ளிபோகும்.