அதிகம் இனிப்பு உணவுகள் உட்கொள்வதால் ஏற்படும் பாதிப்புகள்!

Tamil News large 212853520181022012456
Tamil News large 212853520181022012456

பொதுவாக எந்தப் பண்டிகை, விழா காலங்கள் என்றாலும் முதலில் இனிப்பு வகை பலகாரங்கள் தான் முதன்மை இடத்தை பிடிக்கின்றது.

பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவாக இனிப்பு உள்ளது.

இருப்பினும் இதனை அளவோடு எடுத்து கொள்வதே சிறந்தது. இல்லை என்றால் பல பக்கவிளைவுகளை ஏற்படுத்தி விடும்.

அந்தவகையில் இனிப்பு உணவுகள் அதிகம் எடுத்து கொள்வதனால் ஏற்படும் பக்கவிளைவுகள் என்னென்ன என்பதை இங்கு பார்ப்போம்.

அதிக இனிப்பு சாப்பிடும் போது உடல் கணிசமாக எடை அதிகரிப்பை கொள்கிறது. சர்க்கரை சேர்த்த உணவுகள், சர்க்கரை நிறைந்த பானங்கள் என்பன ஆனால் அதிக எடை , நீரிழிவு அபாயம், எலும்பு முறிவுகள் மேலும் பல நோய்களின் அபாயத்தை அதிகரிக்கும். பற்களில் சிதைவு என்பது உண்டாகும். சர்க்கரை பற்களில் குழிவையோ சிதைவையோ நேரடியாக உண்டக்காது. ஆனால் பற்களின் மேற்பரப்பில் இனிப்புகளின் துகள்கள் படியும் போது ஏற்கனவே அங்கிருக்கும் கழிவுகள் இதனோடு இணைந்து பற்களின் குழிவை துவாரங்களை உண்டாக்கும்.

சர்க்கரை சேர்த்த உணவுகள் சரும ஆரோக்கியத்தில் சிக்கல்களை உண்டாக்கும். எண்ணெய் பலகாரங்கள் போன்று சர்க்கரை சேர்த்த பலகாரங்களும் சரும ஆரோக்கியத்தில் சிக்கலை உண்டாக்குகிறது. அதிக அளவு இனிப்பு சாப்பிடும் போது மூளை டோபமைனை வெளியிடுகிறது.

இது மகிழ்ச்சியான ரசாயனம். ஆனால் சர்க்கரையால் இந்த ஹார்மோன் அதிகரிப்பது ஆரோக்கியமானதல்ல.
அதிக அளவு இனிப்பு சேர்க்கும் போதுஅதற்கு தேவையான இன்சுலின் அளவும் தேவை. உடல் ஆற்றலுக்கு குளுக்கோஸாக மாற்ற இது உதவும். அதிக இனிப்பு அதிக இன்சுலின் சுரப்பை வேண்டும் அல்லது இன்சுலின் எதிர்ப்புதிறனை கொண்டிருக்கவும் வாய்ப்புண்டு. அதிக சர்க்கரை சேர்த்த உணவுகள் உடலில் அழற்சியை உண்டாக்க முடியும். மன அழுத்தம், பதட்டம் மன சோர்வையும் அதிகரிக்க கூடும்.

சர்க்கரை சேர்த்த உணவுகள் இதய நோய் அபாயத்தை அதிவேகமாக அதிகரிக்க கூடும். சோடா, சர்க்கரை சேர்க்கப்பட்ட பானங்களை தவறாமல் எடுத்துகொண்டவர்கள். அதிக இனிப்பு இதயத்தையும் பதம் பார்க்க கூடும்.

அதிக அளவு சர்க்கரையும் கல்லீரலுக்கு ஆபத்தை உண்டாக்க கூடும். அதிக இனிப்பு எடுத்துகொள்ளும் போது அது ரத்த ஓட்டத்திற்கும், கல்லீரலுக்கும் இடையில் அதிகமாகிறது. அதிக சர்க்கரை நிறைந்த உணவுகள் நமது குறுகிய மற்றும் நீண்ட கால நினைவுகளை தக்கவைத்துகொள்ளும் மூளை திறனை நேரடியாக பாதிக்ககூடும்.