வீட்டில் எலுமிச்சை பழத்தினை வைப்பதால் கிடைக்கும் நன்மைகள்!

blobid1511803034687
blobid1511803034687

எலுமிச்சை பழத்தை இரண்டாக நறுக்கி வீட்டில் வைப்பதால் அது உடலுக்கும், மனதுக்கும் ஏராளமான நன்மைகளை தருகிறது.

எலுமிச்சை பழத்தை நாம் உறங்கும் அறையில் வைப்பதால், அதன் நறுமணம் அரை முழுவதும் பரவுகிறது.இதனால் இந்த நறுமணத்தை சுவாசித்து கொண்டு உறங்குவதால் நுரையீரலின் செயல்திறன் மற்றும் மூச்சு தொடர்பாக ஏற்படும் பல பிரச்சனைகளை குறைக்கிறது.

நோய்த் தொற்றுகளினால் பாதிக்கப்பட்டவர்கள் உறங்கும் அறையில் எலுமிச்சை பழத்தை வைப்பதால் அந்த நோய் தொற்றுகள் மேலும் அதிகரிக்காமல் பாதுகாக்கிறது.

இரவில் உறங்கும் போது எலுமிச்சை நறுமணத்தை சுவாசித்து கொண்டு உறங்கினால் சளி, ஆஸ்துமா, அலர்ஜி, தொண்டை அடைப்பு போன்ற நோய்களில் இருந்து விடுபடச் செய்கிறது.

நம் வீட்டு அறைகளில் எலுமிச்சை பழத்தினை அறுத்து வைப்பதினால் அதன் மூலம் ஏற்படும் நறுமணம் நமது வீட்டில் ஏற்படும் துர்நாற்றத்தை தடுக்கிறது.

எலுமிச்சை பழத்தின் நீரை பருகுகினால் நமது ரத்தம் சுத்திகரிக்கப்பட்டு உடல் நலனை மிகவும் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள உதவுகிறது.

நம் உடம்பில் உள்ள வயதாகும் செல்களின் தாக்கத்தை கட்டுப்படுத்தி, சரும நலத்தையும் மேம்படுத்துகிறது.