வாய் துர்நாற்றத்தை தடுக்க சிறந்த வழிகள்!

vai thurnatram 696x392 1
vai thurnatram 696x392 1

சரியாக பல் துலக்கவில்லை, பராமரிப்பு இல்லை என்றால் வாய் துர்நாற்றம் உண்டாகும். இல்லையெனில் உடல் வறட்சி, வாய் வறட்சி, பூண்டு, கோஸ், வெங்காயம் போன்ற உணவுகளை சாப்பிட்டால் வாய் துர்நாற்றம் வீசும். இப்படி வாய் துர்நாற்றம் வீசுவது அருகில் பேசுவோருக்கும் சங்கடம். உங்களுக்கும் சங்கடம். எனவே இதை உடனே சரி செய்ய இந்த விஷயங்களை செய்யுங்கள்.

வாய் துர்நாற்றம் உள்ள மனிதர்களை நாம் பலமுறை கடந்து வந்திருக்கலாம். அல்லது ஒரு வேளை நீங்களே கூட வாய் துர்நாற்றத்தால் பாதிக்கப்பட்டிருந்தால் உங்களை பலரும் ஒதுக்கி இருக்கலாம். இந்த சூழ்நிலை நிச்சயமாக ஒரு வித சங்கடத்தை நிச்சயம் உண்டாக்கும்.

என்ன காரணம்?

வாய் துர்நாற்றத்தை ஹளிடோசிஸ் என்று சொல்வார்கள். இது ஏற்படுவதற்கு பல காரணங்கள் உண்டு. நாம் உண்ணும் உணவைப் பொறுத்து வாய் துர்நாற்றம் உண்டாகலாம். அல்லது மருந்து பயன்பாடு , ஈறு பிரச்சனை, புகை பிடித்தல் அல்லது வறண்ட வாய் அல்லது உதடு போன்றவையும் வாய் துர்நாற்றத்திற்கு காரணமாக இருக்கலாம்.

வாய் அடிக்கடி வறண்டு போவது `க்சீரோஸ்டோமியா’ (Xerostomia) என்று அழைக்கப்படுகிறது. இது வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை உருவாக்கும். தொடர்ச்சியாகப் பேசிக்கொண்டே இருத்தல், புகைபிடித்தல், மது அருந்துதல் ஆகியவை வாய் வறண்டு போவதற்கான காரணங்களாகும்.

இறந்த செல்களை தோல் தானாகவே வெளியேற்றுவதுபோல், பல்லால் வெளியேற்ற இயலாது. பல்லை தினமும் சுத்தம் செய்வதன் மூலம் மட்டுமே பாக்டீரியாக்களை வெளியேற்ற முடியும். பல் பராமரிப்பில் கவனக்குறைவாக இருந்தால், வெளியேற்றப்படாத பாக்டீரியாக்கள் பல்லின் மேல் படலமாகப் படிந்துவிடும். இது `பற்கறை’ எனப்படும். இதுதான் துர்நாற்றத்துக்கு காரணமாக அமையும்.

வாய் துர்நாற்றம் போக்க சிறந்த வழிகள்

துளசி

துளசியையும் வெறுமனே வாயில் போட்டு மெல்லுங்கள் துர்நாற்றம் குறைந்து துளசி வாசனை மணக்கும்.

பேக்கிங் சோடா

சோடாவை தண்ணீரில் கலந்து வாயைக் கொப்பளித்தாலும் துர்நாற்றத்தை போக்கலாம்.

சோம்பு

ஒரு ஸ்பூன் சோம்பை உணவுக்குப் பின் வாயில் போட்டு மெல்லுங்கள். இதனால் துர்நாற்றம் நீங்கும் ஜீரண சக்தியும் அதிகரிக்கும்.

தண்ணீர்

குடல்சார்ந்த பிரச்னைகளால்தான் பெரும்பாலான வாய் துர்நாற்றம் ஏற்படுகிறது. இதைப் சரிசெய்ய காலையில் எழுந்தவுடன் டீ, காப்பிக்கு பதில் 4 டம்ளர் தண்ணீரை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இதனால் வயிறு சுத்தமாவதோடு அல்சர் நீங்கி வாய் துர்நாற்றம் நீங்கும்.

புளிப்பு உணவுகள்

அதிக காரம், அதிக புளிப்பு உள்ள உணவு வகைகளை உண்பதை குறைத்தால் வாய் துர்நாற்றத்தைத் தவிர்க்கலாம்.