உடலுக்கு ஆரோக்கியம் தரும் வெள்ளை தேனின் மருத்துவ குணங்கள்

white honey 500x500 1
white honey 500x500 1

ஒவ்வொரு வகையான தேனின் சுவையும், நிறமும் மற்றும் குறிப்பிட்ட ஊட்டச்சத்துக்களும் அவற்றின் பூக்களின் பண்புகளைப் பொறுத்ததாகவே அமைகிறது.

அதில் ஒன்று தான் வெள்ளை தேன். இதனை மூல தேன் என்றும் அழைக்கப்படுகிறது. ஏனெனில் இது நேரடியாக தேனீக்களின் கூடுகளில் இருந்து வருபவை ஆகும்.

வெப்பமாக்கல் செயல்முறையின் மூலமாக சில நன்மை பயக்கும் ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் பக்டீரியாக்கள் நீக்கப்படுகின்றன. அதனால்தான் வெள்ளை தேன், சாதாரண தேனை விட மிகவும் ஆரோக்கியம் நிறைந்ததாகவும், மதிப்புமிக்கதாகவும் கருதப்படுகிறது.

அதில் கலோரிகள் அதிகம் நிறைந்துள்ளன, வைட்டமின் பி, மெக்னீசியம், கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ் மற்றும் துத்தநாகம் உள்ளிட்ட பல வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் மறைந்துள்ளன.

மருத்துவ நன்மைகள் இந்த தேனில் உள்ளதால் பண்டைய காலங்களில் சளி, இருமல், சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், தொண்டை புண் மற்றும் பல உடல்நலப் பிரச்சனைகளிலிருந்து விடுபட உதவு புரிந்துள்ளது.

அந்தவகையில் தற்போது இந்த வெள்ளைத்தேனில் வேறு என்ன நன்மைகள் உள்ளது என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.

காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் 1 முதல் 2 தே.க வெள்ளை தேனை எடுத்துக் கொள்ளுங்கள். இது வயிற்று வலிக்கு நிவாரணம் அளித்து, அந்த வலியை குணப்படுத்தும் செயல்முறைக்கும் உதவிடும்.

வெள்ளை தேனில் பைட்டோநியூட்ரியண்ட்ஸ் உள்ளன. இந்த தேன் சருமத்தை அழகுபடுத்தவும், தோல் காயங்களை குணப்படுத்தவும் பெரிய பங்களிப்பினை வழங்குகிறது. நீங்கள் பயன்படுத்தும் அழகு சாதனங்களிலும் கூட இதை ஒரு மூலப்பொருளாகப் பயன்படுத்தலாம்.

வெள்ளை தேன் தொண்டை புண்ணை உடனடியாக சரி செய்திட உதவும். அதற்காக, சூடான தேநீரில் எலுமிச்சையுடன் தேனை கலந்து குடிக்கலாம் அல்லது வெதுவெதுப்பான நீரில் தேனை கலந்து உட்கொள்ளலாம்.