யாழ் விமான நிலையம் சர்வதேச விமான நிலையமா? இந்திய ஆக்கிரமிப்பு நிலையமா?

11
11

ஆங்கிலேயர்கள் விமான நிலையங்களை கட்டி விமானங்களை தரை இறக்கியபோது அதை யாரும் வரவேற்று மகிழவில்லை.

ஏனெனில் அது ஆங்கிலேயர்களின் ஆக்கிரமிப்பு என்பது அனைவருக்கும் நன்கு தெரிந்திருந்தது.

ஆனால் இப்போது இந்தியஅரசு யாழ் விமான நிலையத்தை திருத்தி அதில் தனது விமானத்தை இறக்கும்போது நாம் மகிழ்ச்சி அடைகிறோம்.

ஏனெனில் இது இந்திய ஆக்கிரமிப்பின் நிலையம் என்பதை எம்மால் உணரமுடியாதபடி எமது தலைவர்கள் நன்றாக ஏமாற்றியுள்ளனர்.

இங்கு எழும் கேள்வி என்னவெனில், இது சர்வதேச விமான நிலையம் என குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படியென்றால் சர்வதேச விமானங்கள் இங்கு இறங்குவதற்கு இந்திய அரசு அனுமதிக்குமா?

ஏனெனில், 2002ல் இலங்கை பாதுகாப்பு செயலராக இருந்த ஒஸ்ரின் பெர்ணாந்து என்பவர் எழுதிய ” My Belt is Whiter “ என்னும் நூலில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

“ பலாலி விமான நிலையத்தை செப்பனிட இந்தியஅரசு இரு நிபந்தனைகளை முன்வைத்துள்ளது. முதலாவது நிபந்தனை, இந்திய விமானங்கள் தவிர வேறு எந்த விமானங்களும் பலாலியில் இறங்க அனுமதிக்கக்கூடாது. இரண்டாவது நிபந்தனை, இந்தியா கேட்கும் நேரத்தில் விமானநிலையம் இந்தியாவிடம் கையளிக்க வேண்டும்.

இந்த நிபந்தனையின்படி சர்வதேச விமானங்கள் யாழ் விமானநிலையத்தில் இறங்க வாய்ப்பில்லை என்று தெரிகிறது. அதைவிட ஒரு யுத்தம் எற்படும் நேரத்தில் விமான நிலையத்தை இந்திய அரசு கேட்டால் கையளிக்க வேண்டும். இதனால் இந்தியாவை தாக்க நினைக்கும்நாடு யாழ் விமான நிலையத்தை தாக்க முற்படும். இதனால் அநியாயமாக தமிழ் மக்கள் இறக்க நேரிடும்.

இந்த சந்தேகங்களுக்கு உரிய பதில் தரவேண்டியது இலங்கை இந்திய அரசுகளின் கடமையாகும்.

பதில் தருவார்களா?

லவன் மகியின் முகப்புத்தகத்தில் இருந்து