இரண்டாவது சுவரோவியமும் இரவல் சுவரும்!

52 n
52 n

வவுனியாவை வர்ணமயமாக்கலில் சுயாதீன இளைஞர்களினால் இரண்டாவது சுவரோவியம் வவுனியா பழைய பஸ் நிலையத்தில் நான்கு நாள் கடும் உழைப்பின் பின்னர் நேற்றிரவோடு முற்றுப்பெற்றுள்ளது.

திமிரேறி பாயும் காளைகளை முப்பரிமான முறையில் உருவாக்கியிருப்பதே சிறப்பு. முதலாவது சுவரோவியத்தை விட இரண்டாவது சுவரோவியம் வரைவதில் பெருஞ் சிரமங்களையும் அசௌகரிகங்களையும் சந்தித்திருந்ததே உண்மை.

ஓவியம் வரைவதற்காக சிங்கள இளைஞர்கள் பெற்றிருந்த சுவரை அவர்களிடமிருந்து இரவல் பெற்றே இந்த முப்பரிமான சுவரோவியம் வரையப்பட்டுள்ளது. இப்படியான ஓவியம் வரையக்கூடிய இளைஞர்கள் எங்கள் மத்தியில் உள்ளனர் என்பதை வவுனியாவிற்குள் புகும் அனைவருக்கும் தெரிவிக்கவே இந்த இடத்திற்காக பாடுப்படுள்ளோம்.

இன்னும் கூட ஒரு சில உள்ளூர் ஊடகங்கள் தனிப்பட்ட காரணங்களுக்காக எங்களை கணக்கெடுக்காமல் இருப்பதும் மனவருத்தமே. ஆயினும் இந்த சுவரோவியத்துக்காக பலர் தமது ஒத்துழைப்புக்களை வழங்கியுள்ளனர். சிலர் தீந்தை பெற்று தந்தனர், சிலர் உணவுகள் வழங்கியிருந்தார்கள், மழைகாலமென்பதால் தடையின்றி ஓவிய வேலைகள் நடைபெற தரப்பால் வழங்கியிருந்தார் ஒருவர், பண உதவிகளை சிலர் வழங்கியிருந்தார்கள்.

இன்னமும் ஒத்துழைப்புக்களை எதிர்பார்க்கின்றோம் வவுனியா சமூகத்திடமிருந்து காரணம் இனித்தான் எமது கலாசாரம் சார் வாழ்வியல் சார் படங்களை வரையவேண்டிய தேவைப்பாடுள்ளது. உதவ விரும்புவோர் நேரடியாக தளத்திற்கு வந்து உங்கள் உதவிகளை வழங்கலாம். மூன்றாவது ஓவியம் ஹொறவப்பொத்தானை வீதியில் வேல் கபேக்கு எதிரேயுள்ள லண்டன் சூ பொலிஷ் கடைச்சுவரில் ஆரம்பமாகியுள்ளது.

Selvarasa Thanushan