கொரனா வைரஸ் பாதிப்பை பற்றிய ஒரு விளக்கம் !

8 o 1
8 o 1

இது ஒரு வைரஸ் – நுண் நச்சு கிருமிகளில் மோசமானவை இந்த வைரஸ்கள் .

பாக்டீரியாக்கள் போல வைரஸ் ஒரு உயிரணு கொண்ட ஜீவராசி அல்ல அது ஒரு குறுஞ்செய்தி கொண்ட பெட்டகம் போல நேரம் ,காலம் , நிலைமை ,நாடு , மனித உருவாக்க மாறுபாடு என தம்மை நம் தசாவதாரம் கமல் போல மாற்றிக்கொண்டே இருக்கும் ,அதில் ,ஒருமுறை தாக்கிய வைரஸ் மறுமுறை தாக்கும்போது Antigen shift & Antigen Drift என்போம் ,அதைபோல் முந்தைய வருடம் வந்த வைரஸ் கிருமியின் செயல்பாடு அடுத்த முறை முழுதுமாகவோ ,பகுதியாகவோ பெரும்பாலும் மாறுபட்டிருக்கும் ,அந்த வகையில் தான்நம்
சிக்குன்குனியா ,டெங்கு,எபோலா ,தற்போதயகொரனா என அனைத்துமே !!

அதே நேரத்தில் பாக்டீரியாவால் மாதக்கணக்கில் வருடக்கணக்கில் செய்யக்கூடடிய உறுப்பு சேதாரத்தை ,

இவ்வகை கொடிய வைரஸ்கள் நாட்கணக்கில் ஏன் மணிக்கணக்கில் கூட போட்டு தாக்கும் ,கொரனா பாதித்த ஒருவரின் எக்ஸ் ரே படத்தை இன்னும்.பல நுரையீரலை தாக்கும் நோய்கள் படங்கள் கொண்டு ஒப்பிட்டுள்ளேன், ஒவ்வொன்றும் ஒவ்வொரு காரணி ,ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லா தொடர்பு ,மாறுபட்ட நோய் வீரியம் கொண்டது ,ஆனால் விளைவு மட்டும் ஒன்றுமரணம் நன்றாக கவனிக்கவும்

முதலாவது, Silicosis சிலிகோசிஸ் எனும் தொழிற்சாலை புகை மற்றும் சிலிக்கா எனும் நச்சு துகள்களால் வருடகணக்கில் வந்தது , இரண்டாவது ,TB – நுரையீரல் காச நோய் ,இதுவும் அப்படியே தான்
அம்மனிதன் காச நோய் தாக்கத்தை முறையாக மருத்துவம் காணாது போனாலோ ,
மருத்துவம் தவறி போய் அலட்சியப்படுத்தினாலோ இம்மாதிரியான நுரையீரல் பகுதியில் பரவிவிட்ட காச நோய் வரலாம் ,மூன்றவதாக Cancer Lungs நுரையீரல் புற்று, நாம் அனைவரும் அறிந்ததே
முதன்மையாக புகை பழக்கத்தினலும் மற்றும் இதர காரணத்தினாலும் வருட கணக்கில் பெரும்பாலும் காலம் எடுத்து வரக்கூடிய நோய் தாக்கம் ,

ஆனால் உற்று பாருங்கள் நான்காவதாக,Corona தற்போது சீன நாட்டில் இருந்து வெளிவந்துள்ள கொரனா நோயாளியின் புகைப்படம் நம்பகூட இயலவில்லை 4 நாட்களுக்குள்ளான மாற்றம்.இது , நான் மேலே சொன்ன அனைத்து நோயாளுக்கும் நுரையீரல் மிகுதியான சேதம் அடைந்த நிலையில் தான் காணப்படுகின்றனர்

ஆனால் நோய் வீரிய தாக்கம் என்பது ஒவ்வொருவருக்கும் ,
ஒவ்வொரு விதம் , இன்று வரை 85 ற்கும் மேற்பட்டோர் இறந்துன்போனதாக தகவல் ,

இறைவன் கருணை காட்டிடட்டும் , அதே நேரத்தில் கிளப்பி விடும் புரளிகளையும் நம்ப வேண்டாம்

நாட்டில் எந்த வித மருத்துவமும் வாருங்கள்காச நோயை குணமாக்குகிறோம்,
சிலிகோசிஸ் குணமாக்கலாம், என சபதம் இடுவதில்லை

ஆனால் வைரஸ் என்றவுடன் முறுக்கிக்கொண்டு வந்து விடுகின்றனர் ?அங்கே தான் ஏதோ இடிக்கிறது

அதே நேரத்தில் எந்தவித ஆராய்ச்சியும் முறையான அறிவியல் தரவும் இல்லாமல் இப்படி நானும் ரவுடி என கூட்டம் போட்டு கூக்குரல் இடுவது வியப்பாக தான் உள்ளது அக்கு பஞ்சரை கண்டுபிடித்த
சீனாவே போர்கால அடிப்படியில் 1000 படுக்கை கொண்ட பன்னோக்கு மருத்துவமனை கட்டி வருகிறது ,

அதை இங்கே படித்து விட்டு சுற்றும் நம்மூர் சர்வலோக நிவாரணர்கள் எதற்காக இங்குட்டும்
அங்குட்டும் ஓடுகின்றனர் என தெரியவில்லை உபரி தகவல் ,

இங்கே கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் உள்ள அனைத்து நோயாளிக்கும் பிராணவாயு இல்லாது , சுவாச கோளாறு முற்றிக்கோண்டு , சரியான சிகிச்சை , முறையான தருணத்தில் , தரமாக தராமல் தாமதமானாலோ, மறுக்கப்பட்டாலோ ஒவ்வொரு கணமாக தம் உயிர் பிரிவதை அம்மனிதரே உணர்ந்து இறப்பார் ,

Dr.Safi – Nagercoil