இணையத்தை அலங்கரிக்கும் ஆணின் காலணி

footware
footware

சமீபத்தில் கோபாலன் என்பவர் தமிழ்நாட்டின் ஆவுடையார் கோயிலில் உள்ள ஒரு பழமையான கோவிலை அலங்கரிக்கும் சிலையை டுவிட்டரில் பகிர்ந்திருந்தார்.

900 ஆண்டுகளுக்கு முன்பு செதுக்கப்பட்ட ஓர் ஆணின் சிலை அது. அந்த ஆண் அணிந்திருந்த காலணிதான் இப்போது இணையத்தில் பரவி வருகிறது.

இந்தியாவின் பிரபல காலணி நிறுவனம் ஒன்று புது விதமான காலணிகளைச் சந்தையில் இறக்கியுள்ளது. அந்த புது விதமான காலணியைத்தான் 900 ஆண்டுகளுக்கு முன்பான சிலையில் இருந்த ஆணும் அணிந்திருந்தார்.

‘‘ஆயிரம் வருடங்களுக்கு முன்பே தமிழர்கள் நாகரிகமாக இருந்திருக்கிறார்கள்…’’, ‘‘உலக நாகரிகங்களின் முன்னோடி தமிழர்கள்…’’ போன்ற கமெண்டுகள் அந்த டுவிட்டர் பதிவுக்குக் குவிகின்றன. சில மாதங்களுக்கு முன்பு ஹை ஹீல்ஸ் அணிந்த பெண்ணின் சிலை ஒன்று வைரலானது. அதுவும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்திய தமிழ்நாட்டு சிலை.