பொய் சொன்னால் கண்டுபிடிக்கலாம்

lier
lier

ஒருவர் உண்மை சொல்கிறாரா அல்லது பொய் சொல்கிறாரா என்பதை உடல்மொழியில் இருந்தே கண்டுபிடிக்கலாம் என்பார்கள். குறிப்பாக, கண்களை வைத்து சொல்லிவிடலாம் என்றும் அனுபவபூர்வமாகப் பலர் சொல்வதைக் கேட்டிருப்போம். நவீன உளவியல் ஆராய்ச்சி ஒன்று இதற்கு புதிய டெக்னிக் ஒன்றைச் சொல்லியிருக்கிறது.

ஜான் ப்ராட்ஸ்கோ என்ற கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் உளவியல் ஆய்வாளர் உண்மை/பொய்யையைக் கண்டுபிடிப்பதற்காக ஒரு சோதனை ஒன்றை வைத்தார். இந்த ஆய்வில் கலந்துகொண்டவர்களுக்கு 10 கேள்விகளை முன்வைத்தார். ஒவ்வொருவரிடமும் 11 நிமிடம் என நேரமும் நிர்ணயம் செய்யப்பட்டது.

ஆம் / இல்லை என்ற முறையில் பதிலளிக்கும் வகையில் அந்த கேள்விகள் வடிவமைக்கப்பட்டிருந்தன. கேட்கப்படும் கேள்விகளுக்கு யோசிக்காமல் விரைவாக பதிலளித்தவர்கள் உண்மைகளைக் கூறியிருந்தனர். யோசித்து நிதானமாக பதிலளித்தவர்கள் பொய் கூறியிருந்தார்கள். அதாவது ஒரு கேள்விக்கான பதிலைச் சொல்லும்போது அதிக நேரம் எடுத்துக் கொள்பவர்கள், தங்களுக்கு சாதகமான ஒரு பதிலைத் தெளிவாக தயார் செய்துகொள்கிறார்கள். அதன்பிறகே தெளிவாக பதிலளித்துள்ளனர்.

‘ஏனெனில் பழைய நினைவுகளை நிரந்தரமாக ஞாபகத்தில் வைப்பதும், அவற்றை வெளிக்கொண்டு வருவதும் ஆழ்மனதின் வேலைகள். இதுவே நம்மை கட்டுப்படுத்துகிறது. யோசிக்காமல் உடனடியாக பதில் கூற வேண்டும் எனில் அதற்கு ஆழ்மனமே துணையாக இருக்கிறது. ஆழ்மனதில் முன்னரே பதிவாகி உள்ள பதில்களை உடனடியாக கேள்விக்கான பதிலாக கூறுவதையும் பார்க்க முடிகிறது’ என்கிறார் ஆய்வாளர் ஜான் ப்ராட்ஸ்கோ.

-அ.வின்சென்ட்-