எரிக்சொல்ஹைம் கூற்று பற்றி

8 9
8 9

2009 ஏப்ரலில் இந்தியாவும் அமெரிக்காவும் எதவ வந்ததாகவும் ஆனால் பிரபாகரன் மறுத்து விட்டார் என எரிக்சொல்ஹைம் கூறியள்ளார் “

இது எந்தளவுக்கு உண்மை என்று தெரியவில்லை .அத்துடன் இதை ஏன் பதினொரு வருடம் கழித்துக் கூறுகின்றார் என்பதும் புரியவில்லை

2009 யில்இதே எரிக்சொல்ஹைம் மற்றும் இந்தியா ஜநா ்சர்வதேச மன்னிப்பு சபை எல்லாம் சேர்ந்த ஏற்பாடு செய்த படி வெள்ளைக் கொடியுடன் சரணடைந்தவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

தமது ஆயுதங்களை மௌனிப்பதாக அறிவித்து விட்டு இவர்கள் கூறியபடி வெள்ளைக் கொடியுடன் சரணடைந்தவர்களை கொன்றுவிட்ட 2009ல் பிரபாகரன் மறுத்தவிட்டார் என்று இப்போது பழி போடுகின்றார்.

ஒருவேளை இவர் கூறியபடி 2009 ஏப்ரலில் சரணடைந்திருந்தால்அப்போதும் மொத்தமாக கொன்றுபோட்டிருக்கமாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்?
அப்போதும் இவர் “1983ல் சரணடைந்திருக்க வேண்டும். பிரபாகரன் மறுத்துவிட்டார்” என்று கூறியிருக்க மாட்டாரா?
இதே எரிக்சொல்ஹைமிடம் ஈபிடிபி தலைவர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் சந்தித்து தமது உறுப்பினர்களை புலிகள் கொல்வதாக முறையிட்டபோது இவர் கூறியது “ நீங்களும் பதிலுக்கு  புலிகளை கொல்லுங்கள்” 
இதிலிருந்தே இவர்; சமாதானத்திற்காக வரவில்லை. ஈழத் தமிழரின் போராட்டத்தை அழிக்க வந்தவர் என்பதை புரிந்துகொள்ள முடியும்.


எரிக் சொல்ஹைம் நோர்வேயில் ஒரு இடதுசாரிக்கட்சியின் தலைவர் என்கிறார்கள். இப்போதெல்லாம் இடதுசாரி என்று சொல்பவர்களே இனங்களின் தேசிய உணர்வை மறுப்பதில் முதன்மை வகிக்கிறார்கள்.
பாவம் தமிழர்கள் மட்டுமல்ல மார்க்சும் லெனினும்தான்

.-தோழர் பாலன்