தோழர் மாஓசேதுங் நினைவு தினம்.

tt
tt

செப்-9, மாபெரும் ஆசான் தோழர் மாஓ சேதுங் அவர்களின் நினைவு தினமாகும்.

அவர் “மக்கள் சக்தியே மகத்தான சக்தி” என்றார்.“மக்கள் சக்தி அணுகுண்டை விட வலிமையானது” என்றார்.
“மக்களோடு சேர்ந்து உண்ணுங்கள் மக்களோடு சேர்ந்து உறங்குங்கள் மக்களோடு சேர்ந்து உழையுங்கள்” என்று போராளிகளுக்கு வழி காட்டினார்.

“துப்பாக்கி குழாயில் இருந்தே அரசியல் அதிகாரம் பிறக்கிறது” என்பதை சுட்டிக் காட்டினார்.
“மக்களை அணிதிரட்ட ஆயிரம் பொதுக் கூட்டங்களை விட கொரில்லா தாக்குதல் மேன்மையானது” என்றார்.
ஆயுதப் போராட்டத்தின் மூலம் புதிய ஜனநாயகப் புரட்சியை வென்று காட்டினார்.

பாட்டாளி வர்க்க சர்வாதிகார தலைமையில் கலாச்சாரப் புரட்சியை வழி நடத்தினார்.
“நூறு மலர்கள் மலரட்டும் ஆயிரம் கருத்துகள் முட்டி மோதட்டும்” என்றார்.
“மரம் ஓய்வை விரும்பினாலும் காற்று விடுவதில்லை” என்றார்.
” ஒரு புரட்சி என்பது மாலை நேர விருந்தோ, ஒரு கட்டுரை எழுதுவதோ, ஓவியம் தீட்டுவதோ, பூத்தையல் வேலைப்பாடோ அல்ல……….. ஒரு புரட்சி நிதானமுள்ளதாகவும் பொறுமை, கருணை, பெருந்தன்மையுள்ளதாக இருக்க முடியாது. புரட்சி என்பது ஒரு வர்க்கம் இன்னொரு வர்க்கத்தினை பலாத்காரமாக தூக்கி எறிவதாகும் “- மாவோ
மாக்சிச லெனிச மாவோசிச சிந்தனையின் வழிகாட்டலில்புதிய ஜனநாயகப் புரட்சியை வென்றெடுப்போம்

-!தோழர் பாலன்