பொன்வண்டுகள் எங்கே?

பொன்வண்டு. (Jewel Beetle Finery) பத்து பதினைந்து வருடங்களுக்கு முன்பு மாரிகாலம் தொடங்கி விட்டால் போதும் பொன்வண்டுகள் எல்லாம் வாகை மரங்களைச்சுற்றி இரைச்சலுடன் பறக்கும்.

சிறுவர்கள் எல்லாம் அதைப் பிடித்து விளையாடுவதில் மும்முரமாக இருப்பார்கள். பாடசாலையில் ஆசிரியர்களுக்கு தெரியாமல் தீப்பெட்டிக்குள் துளையிட்டு பொன்வண்டுகளை உள்ளே விட்டு நண்பர்களுக்கிடையே காட்டி மகிழ்வார்கள்.

மிக நீண்ட காலம் இவற்றை காணவில்லை. இவை அருகிப்போனதற்கு என்ன காரணம் என்று சிந்தித்து பார்த்தால் எமது மக்கள் மரம் வளர்ப்பது இல்லை. வளர்த்தாலும் பொருளாதர நலன் சார்ந்த வேம்பு, தேக்கு போன்ற மரங்களையே வளர்ப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர்.

வாகை, தேத்தா, நறுவிழி போன்ற மரங்களை பறவைகள் மற்றும் ஊர்வன போன்றவற்றிற்கு பயன்படும் வகையில் வளர்க்க ஆர்வம் காட்டுவதில்லை. தானாக அவைகள் வளர்ந்தாலும் அவற்றையும் விடுவதில்லை.

நீர்நிலைகளை சுத்தப்படுத்துவதற்காக நம் முன்னோர் தேத்தா மரங்களை நீர் நிலைகளுக்கு அருகாமையில் நட்டு வளர்த்தனர். இனி வரும் காலங்களிலாவது இதைப்பற்றி சிந்திப்போமா?

Rainbowdigitalvision Siva