பல்கலைக்கழக வன்முறைகளும் மாணவர் ஒற்றுமையும்

unnamed 6 1
unnamed 6 1

யாழ் பல்கலை கழகத்தில் ஏற்பட்டதாக கூறப்படும் சம்பவம் பற்றிய செய்திகள் பார்த்தேன் .

இரண்டாம் வருட மற்றும் மூன்றாம் வருட மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலையே எல்லோரும் பெரிய பெரிய செய்திகளாக போட்டிருந்தார்கள் .

யாழ் பல்கலைகழகத்தில் மாத்திரம் அல்ல எல்லா பல்கலைகழகத்திலும் அவ்வப்போது இவ்வகையான சம்பவங்கள் நடைபெறுவதுண்டு .

தற்பொழுது உள்ள சமூகவலை தளங்கள் , கமராவுடன் உள்ளவன் எல்லாம் ஊடகவியலாளர்கள் என்கிற நிலை காணப்படுவதாலும் செய்திகள் அவசரம் அவசரமாக பரப்பபடுவதால் ஏதோ பாரிய விபரீத சம்பவம் போல் காட்டப்படுகிறது. என்று நினைக்கிறேன் .

மற்றும்படி இதில் வேறு எதுவும் பாரிய பிரச்சனைகள் இல்லை . இன்று அடிபடும் மாணவர்கள் நாளை ஒன்றாகி வெளியே போவார்கள்

இன்று மூன்றாம் வருடத்தில் இருந்து இரண்டாம் ஆண்டு மாணவர்களை குற்றம் சாட்டி , அவர்களை அடிக்க நிக்கும் மாணவர்களே நாளை பட்டமளிப்பு விழாவில் அவர்களை தேடி தேடி காசு கொடுப்பார்கள் .

இன்று மூன்றாம் வருட மாணவர்கள் எங்களைஅடிக்கிறார்கள் , எங்களை அடக்க பார்க்கிறார்கள் என்று கூறும் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் தான் நாளைக்கு மூன்றாம் ஆண்டு மாணவர்களாக இருக்கும் இவர்களுக்கு பிரியாவிடை பார்ட்டி கொடுத்து கட்டிப்பிடிச்சு அழ போகிறவர்கள்

மாணவர்கள் என்றால் அங்கே பல இருக்கும் . அன்பு , பேரன்பு , பாசம் , கோபம் , சூழ்ச்சி , வஞ்சம் , காதல் , மோதல் என்று எல்லாமும் அங்கே இருக்கும் . அதை எல்லாம் அவர்களே கையாண்டு , பக்குவப்பட்டு , பண்பட்டு வெளியே பட்டதாரிகளாக வருவார்கள் .

அவர்களை அவர்களாகவே விடுங்கள் . அவர்களை போல பல மாணவர்களை கண்டவர்கள் அங்குள்ள , துணைவேந்தர் , விரிவுரையாளர்கள் மற்றும் அதிகாரிகள் . இந்த பிரச்சனையை அவர்கள் கையாள வேண்டிய விதத்தில் கையாளுவார்கள்.

எத்தனையோ இக்காட்டான பல காலகட்டங்களை கடந்து வந்து மெய்ப்பொருள் காண்பதறியு எனும் மகுட வாக்கியத்துடன் உயர்ந்து நிக்கும் யாழ் பல்கலைகழகம் இதையும் கடந்து உயர்ந்து நிக்கும்