ரசமணி பற்றி கேள்விப்பட்டு இருக்கிறீர்களா ?

1 regrth
1 regrth

பாதரசம் சாதாரண அறை வெப்ப நிலையில் திரவ நிலையில் காணப்படும். எவ்வாறு வெப்ப நிலையை குறைத்தாலும் பாதரசத்தினை திண்மமாக மாற்ற முடியாது.

ஆனால் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பாதரசத்தை திண்மமாக மணிகளாக மாற்றி பல்வேறு தேவைகளுக்கு பயன்படுத்தி இருகின்றார்கள்.

சித்த முறையில் ரசமணி செய்யப்படும் முறை பினவருமாறு பல குறிப்புகளில் சொல்லப்படுகின்றது.

உறுதியாக இது தான் சரியான முறை என உறுதிபடுத்த முடியாது.குறிப்புகளின் அடிப்படையில் தான் சொல்கின்றோம்.

செய்யும் முறை
ரசமணி செய்வதற்கு விராலி என்ற மூலிகை தேவை மற்றும் துருசு சுண்ணம் தேவை.ஒரு பாத்திரத்தில் விராலியிலையை நறுக்கி அதில் துருசு சுண்ணத்தை போட்டு மூடிவைத்து விடவேண்டும். சிறிது நேரம் கழித்து பார்த்தால் அதில் அந்த மூலிகையின் சாறு இறங்கி இருக்கும். அந்த சாறை ஒரு இரும்பு கரண்டியில் ஊற்றி, அதற்குள் தேவையான பாதரசத்தை ஊற்றி, எரியும் தீயில் அந்த இரும்பு கரண்டியை வைக்க, அதில் உள்ள பாதரசம் கட்டும். தேவையான மட்டும் உருட்டிக்கொள்ளலாம்.

இது வெறும் ரசமணி தான்.இது ஓரளவும் சக்தி / பலனையே கொடுக்கும். இதனை மந்திர தந்திரங்களால் மேலும் சக்தி ஏற்றும் போதே இது அதிசய சக்திகளை கொண்டதாக மாறும்.
போகர் தனது சப்த காண்டம் என்னும் குறிப்பில் இரசத்தை ஐந்து வகையாக பிரிக்கின்றார்.

இரசம் – இதுதான் சுத்தமான இரசம்.செந்நிறமானது.குற்றமில்லாதது என்று சொல்லப்படும்.
ரசேந்திரன் : இது சற்று கருமையானது.இதுவும் குற்றமில்லாதது என்கின்றார்.
பாரதம் – இதை தான் நாம் பாதரசம் என்று சொல்கின்றோம்.இது வெள்ளி நிறமானது.இது குற்றமுள்ளது என்றும் இதன் குற்றத்தை நீக்கி சுத்தம் செய்தால் மாத்திரமே ரசமணி கட்டலாம் என்றும் சொல்கின்றார்.
சூதம்- இது வெளிறிய மஞ்சள் நிறமானது.இதுவும் குற்றமுள்ளது.
மிசரகம் – இது மிக குற்றமுள்ளது.இதை அதிகமாக சுத்தம் செய்யவேண்டும்.
போகர் கூறியதாக இவ்விரு வழிகள் சொல்லப்டுகின்றது.

“முத்தான சூதத்தைக் கரண்டியிலே விட்டு
முதிந்து நின்ற செந்தூர மாரையிலைக் கிட்டு
காட்டான சாறதனைப் பிழிந்தாயா னால்
ககனம்போற் திரண்டுருண்டு மணியுமாகும்”

போகர் சொல்லும் வழி இது…
பொருள் :-
சூதத்தை ஒரு கரண்டியில் விட்டு துரிசு செந்தூரத்தை அரையிலையில் போட்டு சாறு பிழிய சூதம் திரண்டு மணியாகும்.

“காணும் சுத்தம் செய்த சூதம்
கட்டவே நீகேளடா
பூணு மஞ்ச ணாதிலை
பிழிந்த சாறு சுருக்கிட
வேணு மிரண்டு நாழிகையில்
மெழுகு போலுருண்டிடும்”

பொருள் :-
சுத்தி செய்த ரசத்தை அடுப்பேற்றி மஞ்சணாதி சாறு விட்டு சுருக்கிட இரண்டு நாழிகையில் ரசம் உருண்டு திரண்டு மணியாகும்.

ஒரு இடத்தில இருந்து இன்னொரு இடத்திற்கு மிக வேகமாக செல்ல ரசமணியை போல ரசக்குளிகை என்ற ஒன்றை பயன்படுத்தியதாக குறிப்புகள் சொல்லபடுகின்றன.

அதாவது கருந்துளை பயணம்,காலப்பயணம் என இன்றைய அறிவியல் இதை போல ஒன்றை தான் முயற்சித்து கொண்டு இருக்கிறது.

இது போக இந்த ரசமணியை உடலில் அணித்து இருந்தால் உடல் ஆரோக்கியம் பேணப்படும்.

சித்தர் மருத்துவத்தில் அணைத்து நோய்க்கும் மூன்று காரணி தான் சொல்லப்டுகின்றது.

அது தான்

வாதம்
பித்தம்
கபம்
இதில் எதாவது ஒன்று கூடினாலும் குறைந்தாலும் நோய்கள் பீடிக்கும்.

ரசமணி இந்த மூன்றையும் சமப்படுத்தும் வல்லமையுடையது.

இரத்த ஓட்டத்தை ஒரே சீராக இருக்க உதவுகிறது. இரத்தத்தை சுத்தி செய்து உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது, முக்கியமாக இரத்த அழுத்த சம்பந்தப்பட்ட நோய்களால் பாதிக்கபட்டவர்கள் இதை அணிவதால் இயல்பான வாழ்க்கைக்கு திரும்ப முடியும்.
குண்டிலினியின் அடி நாதமான கருமையத்தை சுத்திசெய்யும் தன்மை இந்த இரசமணிக்கு உண்டு.
உடல் உறுப்புகள் சரியாக இயங்குவதற்கு இரசமணிகள் மிகவும் பயனுள்ளவையாக இருக்கின்றன.
இரசமணியை அணிந்துகொண்டால் சம்பந்தப்பட்டவரின் உள்ளொளி தூண்டப்பட்டு முகம் பிரகாசிக்கிறது. சிந்தனை, புத்திசாலித்தனம் மிளிரும்.

வயதானாலும் இளைமையுடன் வைத்திருக்கும் சக்தி இந்த ரசமணிக்கு எப்பொழுதும் உண்டு, மேலும் ரசமணி அணிபவரை தோற்ற பொலிவுடன் வைத்திருக்கும்.
விந்தணுவை கெட்டிப்படுத்தும் சக்தி இரசமணிக்கு உண்டு.
பேய், பிசாசு, காத்து, கருப்பு மற்றும் துர்சக்திகளிடம் இருந்து நம்மை கத்து நிற்கும் சக்தி இதற்கு உண்டு.
செய்வினை கருப்பு, பில்லி, சூன்யம் போன்ற கெட்ட சக்திகளின் பாதிப்பிலிருந்து பாதுகாக்கவும், மீட்டு எடுக்கவும் இரசமணியை பயன்படும்.

நியாயமான வியாபாரம் மற்றும் தொழில் வளர்ச்சியின் வெற்றிக்கு பெரிதும் துணைபுரியும்.
வண்டி, வாகனங்களில் செல்லும்பொழுது விபத்துகளை தடுக்கும் தன்மை இரசமணிக்கு நிச்சயம் உண்டு.
ஞாபக சக்தியை மேலோங்கி நிற்கும், தம்பத்திய வாழ்க்கை மகிழ்ச்சியை தரும், கணவன் மனைவி ஒற்றுமை மேலோங்கும்.

சிறு குழந்தைகளுக்கு மிகவும் பாதுகாப்பு தருவதில் இரசமணி மிகவும் பயன்படும், குழந்தைகளுக்கு அடிக்கடி ஏற்ப்படும் நோய்களில் இருந்து பாதுகாக்கும்