சற்று முன்
Home / பொதுக்குரல் / தேயிலை பை எப்படி தயாரிக்கப்படுகிறது? அதனால் உடல்நல பாதிப்புகள் ஏற்படுமா?
2 used
2 used

தேயிலை பை எப்படி தயாரிக்கப்படுகிறது? அதனால் உடல்நல பாதிப்புகள் ஏற்படுமா?

தேயிலையை சிறிய பைகளில் வைத்து தேயிலை பை தயார் செய்கின்றனர். இந்த தேயிலை பைகளை அப்படியே பால் அல்லது சூடான நீரில் மூழ்கும்படி வைத்தால் தேயிலையின் சாயம் இறங்கி தேநீர் தயாராகிறது.

இன்று இந்ததேயிலை பைகளை பல நிறுவனங்கள் தயார் செய்து போட்டிபோட்டு விற்கின்றனர். இதற்கான விளம்பரங்களைப் பார்த்து ஆர்வத்தில் தற்போது அதிகமானோர் தேயிலை பை பயன்படுத்தத் தொடங்கி உள்ளனர்.

இந்த தேயிலை பை எப்படி தயாரிக்கப்படுகிறது? அதனால் உடல்நல பாதிப்புகள் ஏற்படுமா? என்று எதை பற்றியும் கவலைப்படாமல் நாம் அதனை உண்டு நம் உடலுக்கு நாமே சூனியம் வைத்து கொள்கிறோம்.

பக்கற் தேயிலை தயாரிக்கையில், அது எளிதில் கிழியாமல் இருப்பதற்காக ஒருவித வேதிப்பொருள் சேர்க்கப்படுகிறது. இந்த வேதிப்பொருள் புற்றுநோயை உண்டாக்கும் காரணியாக உள்ளது என்று தேசிய தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த வேதிப்பொருள் பூச்சிக்கொல்லியாகவும் பயன்படுத்தப்படுகிறது. சுடுதண்ணீரில் போடும்போது எப்பிகுளோரோஹைட்ரின் நீரில் கரைந்து வேதியியல் மாற்றமடைந்து எம்.சி .பி .டி என்கிற வேதிப்பொருளாக மாறுகிறது.

இது புற்றுநோய் காரணியாக இருப்பதோடு குழந்தையின்மை மற்றும் நோய் எதிர்ப்புசக்தி குறைவு போன்ற பிரச்னைகளுக்கு காரணமாகிறது.

மேலும், மார்பகப் புற்றுநோய், புரோஸ்டேட் புற்றுநோய், நீரிழிவுநோய், உடல்பருமன், இதயநோய்கள், கல்லீரல், தைராய்டு பிரச்னைகள், குழந்தையின்மை, பெண் குழந்தைகள் சீக்கிரமாக பருவமடைதல் மற்றும் குழந்தைகளின் நடத்தை மாற்றங்கள் போன்ற பிரச்னைகள் ஏற்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

49

WHATS APP மூலம் பணம் பரிவர்தனை செய்யும் வசதி அறிமுகம்

பொழுது போக்கு மற்றும் தொலைத் தொடர்புகளுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த வாட்ஸ்அப் செயலியில், புது அம்சமாக ...