நீங்கள் கேள்விப்படாத விசித்திரமான மரணம்

b33
b33

நீங்கள் கேள்விப்படாத விசித்திரமான மரணம் இறப்பு இப்படியும் இருக்கிறது .

இப்படி ஒரு விசித்திரமான மரணமானது மனிதனுக்கு ஏற்படுவது அல்ல , இது ஒரு பூச்சிக்கு ஏற்படும் வித்தியாசமான ஒன்று. இதை பெரும்பாலானோர் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

இந்த பூச்சி நாம் அனைவரும் பார்த்த ஒன்றுதான் . தயிர் பூச்சி அல்லது கும்பிடு பூச்சி என்றும் ஆங்கிலத்தில் Praying mantids என்று அழைப்பர். இது பெரும்பாலும் கூட்டமாக திரியாமல் தனியாக இரையைத் தேடி அலையும் ஒரு பூச்சி . இது மற்ற பூச்சிகளை உண்டு வாழக்கூடியது .

முதிர் வயதை அடைந்த பெண் பூச்சி தன் இனப்பெருக்கத்திற்கு ஏற்ற ஆண் பூச்சியை தேடி அலையும். இவ்வாறு தேடி அலையும் அந்த பூச்சிக்கு ஆண் பூச்சி கிடைத்தவுடன் தன் சாதுவான பேச்சையும், அழகையும் பயன்படுத்தி தன் பக்கம் இழுதுக்கொள்ளுமாம் .

இரு பூச்சியும் இனப்பெருக்க நேரத்தில் பெண்பூச்சி தன் தலையை காதல் பொங்கிய முகத்துடன் ஆண் பூச்சியில் கழுத்தருகே கொண்டு சென்று தனது கூரிய பற்களைப் பயன்படுத்தி ஆண் பூச்சியின் தலையை கொய்து அந்த தலையை தனியே எடுத்து சென்று முழுமையாக சாப்பிட்டு விடுமாம் .பிறகு தனது குழந்தைகளைப் பெறும் காலம் வரை ஓய்வு எடுத்துக் கொள்ள்ளுமாம் . இவ்வாறு நடந்த பின்பு அடுத்த இனப்பெருக்க காலம் வரும் பொழுதும் இதே போன்று நடந்துகொள்ளுமாம் .